Jan 21, 2018

கபூர் லோயருக்கு எம்.பியை வழங்குங்கள்; அட்டாளைச்சேனையில் ஜவாத்



ஹனீப் அஹமட்

முஸ்லிம் கட்சியின் ஸ்தாபக செயலாளர் கபூர் லோயருக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவியை வழங்கி அட்டாளைச்சேனையை அபிவிருத்தியடைய செய்யுங்கள், அதைவிடுத்து மக்களை ஏமாற்றாதீர்கள் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் குறிப்பிட்டுள்ளார்,

அட்டாளைச்சேனையில் மயில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பொழுதே இதனை தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர்,

ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அடமானம் வைத்து அரசியல் செய்கிறார், அவர் அதற்காக கோடி கோடி பணம் வாங்கியுள்ளார், என்னைப்போன்ற பலரை ஏமாற்றியுள்ளார். அதில் கட்சியின் மூத்த போராளிகளின் புறந்தள்ளல்களும் உள்ளது, கட்சிக்காக என்று இருக்கும் கபூர் லோயர் போன்றோருக்கு பதவிகளை வழங்கி ஊக்கப்படுத்தலாம் அதை விடுத்து அவரின் சகோதரங்களுக்கு வழங்குவது உகந்ததல்ல என்றார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network