டிரம்ப் கோபுரத்தில் தீ


அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரிலுள்ள டிரம்ப் கோபுரம் தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 58 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் மேல் மாடியில் இந்த தீ ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பட்டுள்ளன.
அமெரிக்க நேரத்தின் படி நேற்று காலை 7.00 மணிக்கு இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 100 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
டொனல்ட் டிரம்பினால் இந்த கட்டிடத்துக்கு விசேட பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...