Jan 20, 2018

வீட்டுக்குள்ளும் அரசாங்கம் ஊழல் செய்யும்



மூன்று வருடங்கள் ஆட்சியில் இருந்த அரசாங்கத்திற்கு, மக்களுக்கான பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாதுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, 

ம்பிலிப்பிடியவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். பிரதமர் ரணில் விக்கரமசிங்க, உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கமே வெல்லும் என தெரிவித்துவருகிறார். 

 அவ்வாறு வெற்றிபெறும் பட்சத்திலேயே, அவர்களுக்கு இடையூறுகள் இன்றி மத்திய வங்கியில் நிகழ்த்திய ஊழல்களை போல் தமது செயற்பாடுகளை கிராம மட்டங்களிலும் முன்னெடுக்க முடியும். நாட்டை சிங்கப்பூர் போன்று வளச்சியடைய செய்வதாக தெரிவித்துக் கொண்டு, நாட்டின் ஒவ்வொரு பாகங்களையும் வெளிநாடுகளுக்கு தரைவார்த்து கொடுக்கின்றனர். ஆனாலும் மக்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் முடியவில்லை எனவும் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post