மஹிந்தவின் வாகனத்தில் மோதுண்டு நால்வர் படுகாயம்!முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு வாகனத்தில் மோதுண்ட 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரிந்த பிரதேசத்தில் இருந்து மாத்தறை கும்புருபிட்டிய வரையிலான வீதியின் மலான பிரதேசத்தில் நேற்று மாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

பெரிய வளைவை கொண்ட இந்த இடத்தில் முச்சக்கர வண்டியை முந்தி செல்ல முயற்சித்த வேளையில், இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. மஹிந்தவின் பாதுகாப்பாளர் 5 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

விபத்து தொடர்பில் முச்சக்கரவண்டி மற்றும் மஹிந்தவின் பாதுகாப்பு வாகனம் கும்புருப்பிட்டி பொலிஸ் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் கும்புருப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.