ஐக்கிய தேசிய கட்சி மீது அமைச்சர் தயாசிறி குற்றச்சாட்டுஐக்கிய தேசிய கட்சியின் தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டில் தற்போது பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பண்டுவஸ்நுவரயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய வர்த்தகர்களை தனிமைப்படுத்தி விட்டு ஐக்கிய தேசிய கட்சி நடைமுறைப்படுத்திய திறந்த பொருளாதார கொள்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.