Jan 12, 2018

கொழும்பை சிறந்த மாநகரமாக மாற்றுவதற்கு ரோசிக்கு வாக்களியுங்கள்!

(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு மாநகரத்தின் மேயர் வேட்பாளராக ஜ.தே.கட்சி -  உலக பிரச்சித்பெற்றவா், முன்னாள் மலேசிய நாட்டின் துாதுவா், மாகாண சபை உறுப்பிணா், பாராளுமன்ற உறுப்பிணா் ,மகளிா் சிறுவா் விவகார அமைச்சராக இருந்து சிறந்த அனுபவங்களை பெற்றவா் ரோசி சேனாநயக்க. அவா்  தற்பொழுது  தனது நிர்வாகச் செயலாளராகவும்  கடமையாற்றுகின்றாா். 

இந்த நல்லாட்சியினை ஏற்றதும் எமது அரசு    முன்னாள் ஜனாதிபதியின் பெற்ற  கடன்களிலிருந்து  சிறுகச் சிறுக  மீண்டுவருகின்றோம்.  அடுத்த 4 ஆண்டு கால ஆட்சியில் இலங்கையின்  வா்த்தக மையத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை வகுத்து  இலங்கை மீளவும் ஒரு சிறந்த வா்த்தக நாடாக  கட்டியெழுப்பி வருகின்றோம். 

இந்த காலத்திற்குள் கொழும்பினையும்     2020 வரை ஒர் சிறந்த மாநகரமாக  மாற்றுவதற்காக  நீங்கள் ரோசி சேனாநாயக்காவையும்  அவருடன் போட்டியிடும் ஏனைய உறுப்பிணா்களையும்  தெரிவு செய்யுங்கள்.என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினாா்.

 மேற்கண்டவாறு பிரதமா் ரணில் விக்கிரமசிங்க    ஜ.தே.கட்சியின்  கொழும்பு  ஹெவலொக் டவுன் பிரதேசத்தில் நடைபெற்ற  கூட்டத்தில் கலந்து கொண்டு  உரையாற்றினாா்.  இக் கூட்டம்  நேற்று (11) ஜ.தே.கட்சியின் கொழும்பு கிழக்கு  அமைப்பாளரும் மேயா் வேட்பாளருமான ரோசி சேனாநாயக்காவின் தலைமையில் நடைபெற்றது.   அத்துடன் முன்னாள் அமைச்சா் இ்ம்தியாஸ் பாக்கீா் மாக்காா்,   அமைச்சா் ஹரீம் பீரிஸ்,  மற்றும் அமைச்சா் சாகல ரத்நாயக்க , இரான் விக்கிரமசிங்க  பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் ஆகியோறும் கலந்து கொண்டனா் 

அங்கு தொடா்ந்து உரையாற்றிய பிரதம மந்திரி

1960 காலப்பகுதியில் இருந்து இப்பிரதேசம் முன்னாள் ஜனாதிபதி  ஜே.ஆர். ஜெயவா்தனா காலத்தில் இருந்து கொழும்பு கிழக்கு  வடக்குப்  பிரதேசங்கள்  தொடா்ந்து ஜ.தே.கட்சி வெற்றிவாகை சூடும் ஒரு பிரதேசமாகும்.  கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பை அழகு படுத்துவதாகச் சில வேலைத்திட்டங்களை வகுத்தாா்கள்.  ஆனால் ஒரு நிலையான திட்டமிடப்படாத திட்டங்களை வகுத்து  பாரிய  கடன்களையே பெற்றுள்ளாா்கள். தற்பொழுது அக் கடன்களை கூட மேல் மாகாண அபிவிருத்தி  மா  நகர அபிவிருத்தி அமைச்சு  செலுத்தி வருகின்றது.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னா் தான்  -  ஜி.எஸ்.பி திட்டத்தினை மீள பெற்றுக் கொடுத்தோம்.   மஹிந்த ராஜபக்சவினால் பெற்ற  பாரிய கடன் சுமைகளில் இருந்து  இருந்து மீண்டு வருகின்றோம்.   தற்பொழுது எமது ஆட்சியில்  கொழும்பில் உல்லாச பிரயாணிகள் வருகை  பெறுகி வருகின்றது.  மேலும் ,  ஹம்பாந்தோட்டை விமான நிலையம், துறைமுகங்களை மீள வா்த்தக மையமாக ஏற்படுத்தி வருகின்றோம்.   கொழும்பு நகரின் மின் வழு  சக்திக்காக” எல்.எம். ஜி”    மின்வழு சக்தி 3 திட்டத்தினை  .    யப்பாண், இந்தியா போன்ற நாடுகள் இத் திட்டங்களை அமுல்படுத்த உள்ளன.  

 நடுத்தர வருமாணம் மற்றும் முடுக்கு வீடுகளில் வாழும்  கொழும்பு வாழ் மக்களுக்காக    50 ஆயிரம் வீடுகள்  கொண்ட தொடா் மாடி வீடுகள் நிர்மாணிப்பதற்கு   நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. 

அத்துடன்     நடுத்தர வா்க்கத்தினா்  தமது வீடுகளை அரச அல்லது  தணியாா் வீடுகளை வாங்குவதற்காக  தேசிய சேமிப்பு வங்கி  ஊடாக  அவா்கள் 6 வீத வட்டிக்கு கடன் பெறலாம் இதற்காக அரசாங்கம் 75 பில்லியன் ருபாவை தேசிய சேமிப்பு வங்கிக்கு  இவ் ஆண்டு நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. 

 கண்டி, ஹம்பாந்தோட்ட அதி வேக பாதை ஆரம்பிக்கப்பட்டதும். கொழும்பு ஒரு  பாரிய வா்த்தக மையமாகும்.  கொழும்பில் வீடுகள். உல்லாச ஹோட்டல்கள்,   மட்டுமே  அமையப்பெறும்  கொழும்பில் உள்ள  தொழிற்சாலைகள் கொழும்புக்கு வெளியே கொண்டு செல்லப்படும். அத்துடன் தற்பொழுது கொழும்பில் பாரிய பிரச்சினையாக  வாகன நெறிசல் பிரதேசமாக காணப்படுகின்றது. அதற்காக  ராஜகிரியவில் இருந்து பத்தரமுல்ல, மற்றும் கட்டுநாயக்க நெடும்பாதையில் இருந்து கொழும்பை அடையக்கூடிய புதிய  மேம்பாலங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளது.

கொழும்பில் குப்பைகள் கழிவுகள்  சேமித்து முகாமைத்துவம் செய்வதற்காக  மேல்மகாண மநாகர அமைச்சு  வேறு ஒரு பிரதேசத்தில்  அதனை அமுல்படுத்தி வருகின்றது. அத்துடன் டெங்கு பிரச்சினையும்  கொழும்பில்  போதைப்பொருள்  பாவிக்கும் பிரதேசமாக மாறி வருகின்றது. இதற்காக பொலிஸ், மநாகர சபை, பள்ளிவாசல், கோவில் பண்சலை, இளைஞா் பாராளுமன்றம்,  சம்பந்தப்டுத்தி இதற்காக ஒரு விழிப்புணா்வு மற்றும் தெளிவுட்டல் திட்டம் வகுக்கப்படுகின்றது. 

போதைப் பொருள்  தொழில் செய்பவாகள்,  அதனை பாவிப்பவா்கள், அதற்கு உதபுபா்கள் கடத்துபவா்களுக்கு எதிராக  கடும் தீவிர தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.   ண்டாா்கொழும்பு மாநகர சபையில் போதை பாவிப்பவா்களை தொழிலுக்கு இணைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் ரோசியை பிரதமா் வேண்டிக் கொண்டாா் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network