தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படைகள்


தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகளின் பாதுகாப்புக்களை பெற்றுக்கொள்ள தீர்மானித்திருப்பதாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் தெளிவு படுத்தும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை எந்தவொரு கட்டத்திலும் அனைத்து தரப்பினருக்கும் நடுநிலைமையாக சரியான நீதியை பெற்றுக்கொடுப்பது அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் கடமையாகும் என குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.