தேர்தல் ஆணையகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் ஊடக வழிகாட்டல் தொகுப்பை பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திடும் நிகழ்வின் மூலம் அரசியல் இலாபம் தேட முயற்சித்திருப்பதாக கபே அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
குறித்த நிகழ்வு நேற்று பிரதமரின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அங்கு எதிர்வரும் தேர்தலில் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பாப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்தானது தேர்தல் ஆணையகத்தின் நிர்வாக நடவடிக்கைகளினூடாக மறைமுகமாக அரசியல் இலாபம் தேடுவதாகும் என கபே அமைப்பின் மூலம் தேர்தல் ஆணையகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share The News

Post A Comment: