மு.கா, நௌசாத் கேட்டிருக்கும், தனது சம்மாந்துறை வட்டார பிரிப்பு சம்பந்தமான முன் மொழிதலை வெளிப்படுத்துமா...?? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

மு.கா, நௌசாத் கேட்டிருக்கும், தனது சம்மாந்துறை வட்டார பிரிப்பு சம்பந்தமான முன் மொழிதலை வெளிப்படுத்துமா...??

Share This


நாம் ஒருவரை விரல் நீட்டி, குற்றம் சுமத்துவதாக இருந்தால், நாம் குறித்த விடயத்தில் சரியான விதத்தில் செயற்பட்டிருக்க வேண்டும். சம்மாந்துறை வட்டார பிரிப்பு சம்பந்தமான கதையாடல்களில் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நௌசாத் மீது அனைவரும் குற்றம் சாட்டுவதை அவதானிக்க முடிகிறது. இது தொடர்பில் ஒவ்வொருவரும் முன் மொழிதல்களை சமர்பிக்க முடியும். அந்த வகையில் மு.காவும் இவ் விடயத்தில் கரிசனை கொண்டு, தனது முன் மொழிதலை சமர்பித்திருக்க வேண்டும். அவர்கள் ஒரு முன் மொழிதலை சமர்ப்பித்ததாகவும் அறிய முடிகிறது.

அவர்களது அன்றைய முன் மொழிவு நிராகரிக்கப்பட்டிருந்தது. இவர்களது முன் மொழிவு நிராகரிக்கப்படும் வகையில் அமைந்திருந்தால், இவர்கள் முன்னாள் தவிசாளர் நௌசாத் மீது குற்றம் சுமத்துவதற்கு எந்த வித தகுதியும் அற்றவர்கள். அது சில அரசியல் அழுத்தங்களினால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அந்த குறித்த முன் மொழிவை அவதானித்த பின்பே மக்களால் குறிப்பிட முடியும். தற்போதைய நிலையில் மு.காவினர், தாங்கள் முன் வைத்த குறித்த முன் மொழிவை வெளிப்படுத்த வேண்டும்.

மு.காவினர், நாங்கள் எந்தவித முன் மொழிவுகளையும் சமர்பிக்கவில்லை என்றால், நாம் முதலில் உமிழ்ந்து துப்ப வேண்டியது மு.காவினரை நோக்கித் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. அது மாத்திரமல்ல, எல்லைப் பிரிப்புக்கு பாராளுமன்ற அனுமதி வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இவற்றுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. இவற்றுக்கு மு.கா எதிர்த்து வாக்களிக்காமல் ஆதரவாக வாக்களித்துவிட்டு, இப்போது மேடைகளில் கண் பொஞ்சாதி போன்று ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை.

நான் அறிந்த வகையில், அவ்வாறு அவர்கள் அதனை வெளிப்படுத்தும் போது, இன்று அவர்கள் முன்னாள் தவிசாளர் நௌசாத் மீது முன் வைத்துக்கொண்டிருக்கும் பல விமர்சனங்களுக்கு பதில் கிடைக்கப்பெறும். இது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அதனை நிச்சயம் வெளிப்படுத்த மாட்டார்கள். இவற்றிலிருந்து மக்கள் தெளிவை அறிந்துகொள்ள வேண்டும். சில நாட்கள் முன்பு கயர் பள்ளி முன்பாக இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து, மு.கா முன் வைத்த முன் மொழிவை வெளிப்படுத்த வேண்டும் என கோரி இருந்தார். தற்போது மு.காவினர் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அழைக்கும் போது, அனைத்து குற்றச் சாட்டுக்களுக்கும் மற்றும் விமர்சனங்களுக்கும் பதில் வழங்கப்படும் என்றே அழைக்கின்றார்கள். முடிந்தால், முன்னாள் தவிசாளர் நௌசாத் இக் கேள்விக்கு பதில் அளிக்கட்டும் பார்க்கலாம்.

( விரைவில் இது தொடர்பில் விரிவான கட்டுரை வெளியிடப்படும். )

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE