Header Ads

ad728
  • Breaking News

    சாய்ந்தமருதில் தற்போது இடம்பெறுவது சர்வஜன வாக்கெடுப்பே!!!



    எம்.வை.அமீர்-

    வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் கூறுவதுபோல் சாய்ந்தமருதில் தற்போது இடம்பெறுவது அரசியல் நடவடிக்கை இல்லை என்றும் மாறாக அந்த மக்களின் மூன்று தசாப்தகால கோரிக்கையான தனியான உள்ளுராட்சிசபை தங்களுக்கு வேண்டும் என தேசியத்துக்கு எடுத்துக்கூறும் சர்வஜன வாக்கெடுப்பு மட்டுமே  என்று சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய மக்கள் பணிமனை களமிறக்கியுள்ள, சுயட்சைக்குழுவில் 21 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் தொழிலதிபர் ஏ.ஆர்.எம். அஸீம் தெரிவித்தார்.

    குறித்த 21 ஆம் வட்டாரத்தில் சுயட்சைக் குழுவுக்கான தேர்தல் அலுவலகம் ஒன்று 2018-01-01 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா கலந்து கொண்டதுடன் பள்ளிவாசலின் உயர்மட்ட உறுப்பினர்களும் ஊர்ப் பிரமுகர்களும் பெரும் திரளான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

    பிரதேச செயலகத்தின் முன்னாள் சிரேஷ்ட நிருவாக உத்தியோகத்தரும் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அஸீம், சாய்ந்தமருதில் உள்ள 6 வட்டாரங்களையும் வென்று அத்துடன் மேலதிக ஆசனங்களையும் பெற்றுக்கொண்டு வேறு கட்சியுடன் கூட்டாட்சி செய்வதற்கு பள்ளிவாசல் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படும் கூற்றில் உண்மை எதுவுமில்லை என்றும் நிட்சயமாக தாங்கள் யாருக்கும் முட்டுக்கொடுக்க போகமாட்டோம் என்றும் முதல்வர் பதவிக்கோ அல்லது பிரதி முதல்வர் பதவிக்கோ சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளை அடகு வைக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

    சில அரசியல்வாதிகள் இருபதுகோடி முதல் முப்பதுகோடி வரை தங்களிடம் பேரம்பேசுவதாகவும் அதற்கு இந்த சுயட்சைக்குழு சோரம் போகாது என்றும் தெரிவித்தார்.  தன்னை தோக்கடிப்பதற்கு ஒருவர் ஒருகோடி செலவிடவுள்ளதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த அஸீம், சாய்ந்தமருதில் திட்டமிட்டு பிரச்சனைகளை உண்டாக்கி தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்த திட்டமிடுவதாகவும் தெரிவித்தார். ஜனநாயக முறையில் தேர்தலை தாங்கள் எதிர்கொள்வோம் என்றும்  தெரிவித்தார்.

    சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரான அணியில் இருப்போர் குடிகாரர்கள் என்று தெரிவித்த அஸீம் மானமுள்ள எந்த சாய்ந்தமருதானும் அவர்களது பிச்சைக் காசுக்கு சோரம் போகமாட்டான் என்றும் தெரிவித்தார்.
    சிலர் பிரதேசங்களில் குழப்பங்களை ஏற்படுத்த முனைவதாக தெரிவித்த அஸீம் சண்டை என்றால் தாங்களுக்கு சக்கரைப்பொங்கல் என்றும் இருந்தாலும் உள்ளுராட்சிசபை என்ற தாங்களின் இலக்கை அடைவதற்காய் பொறுமை காப்போம் என்றும் தெரிவித்தார்.

    நிகழ்வில் குறித்த வட்டரத்துக்கான தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க குழு ஒன்றும் இங்கு தெரிவு செய்யப்பட்டது.

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728