வவுனியா நகரசபை குடியிருப்பு வட்டாரம் 05 மற்றும் வவுனியா நகரசபை தேக்கவத்தை வட்டாரங்களில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான *கெளரவ மஸ்தான் காதர் அவர்களின்* தலைமையில் வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. 


அங்கு சிறப்புரையாற்றிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் 
இம்முறை வவுனியா நகரசபையின் அதிகாரங்களை எமது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் கூறியதாவது 

வவுனியா  நகரையும் சூழவுள்ள பிரதேசத்தையும் அபிவிருத்தி செய்வதற்கான ஆணையை இம்முறை எமது கட்சிக்கு வழங்குவதன் மூலம் நாட்டில் உள்ள சிறந்த நகரங்களில் ஒன்றாக இந்த வவுனியா நகரசபையை திகழவைக்க  எம்மால் முடியும்.

ஆகவே இந்த தேர்தலில் நீங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உங்களது வாக்குகளை பூரணமாக அளித்து எமது வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
 மேற்படி நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

\ஊடகபிரிவு

Share The News

Post A Comment: