சுதந்திரக்கட்சியின் ஐந்து எம்.பிக்களின் உறுப்புரிமை இரத்துகூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சிக்குள் செயற்பாட்டு ரீதியாக இயங்கி வரும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையே இவ்வாறு இரத்து செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமைகளும் இரத்து செய்யப்படும் என்ற செய்தியை வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்படுவதால், பொதுஜன முன்னணிக்கு வாக்களித்து எந்த பயனும் இல்லை என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...