தைக்கா நகர் வட்டார வேட்பாளர் ஐ.எல்.எம்.றபீக்கின் கட் அவுட்டுக்கு மாற்றுக் கட்சியினரால் சேதம்அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் தைக்கா நகர் வட்டாரத்தில் போட்டியிடும் ஐ.எல்.எம்.றபீக்கின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கட்அவுட் போஸ்டர்கள் மாற்றுக்கட்சி ஆதரவாளர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நள்ளிரவு நேரத்தில் இந்த மோசமான வேலையை மாற்றுக் கட்சியினர் செய்துள்ளமை கவலையளிப்பதாக வேட்பாளர் ஐ.எல்.எம்.றபீக் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
அத்தோடு அவரது வீட்டுக்கு முன்னுள்ள சுவரில் மாற்றுக்கட்சி வேட்பாளரின் சுவரொட்டியையும் ஒட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
மக்கள் மத்தியில் எனக்கு ஆதரவு அதிகரித்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வங்குரோத்து அரசியல் செய்ய வெளிக்கிட்டுள்ளனர். தைக்கா நகர் வட்டாரத்தில் மயிலின் வெற்றியை எவராலும் தடுத்துவிட முடியாது என்றும் வேட்பாளர் ஐ.எல்.எம்.றபீக் தெரிவித்தார்.