Jan 23, 2018

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையை, நாங்களே பெற்றுத்தருவோம் - ஹரீஸ்
முஸ்லிம்களின் இருப்பு விடயத்தில் மிகுந்த தூர நோக்குடன் சிந்திக்கும் தன்னையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் பலவீனப்படுத்தி அதனூடாக தங்களது இருப்பை ஸ்தீரணப் படுத்துவதற்காக சிலர் முயற்சிகளை எடுப்பதாகவும் அவர்களது விடயத்தில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் மக்கள் தங்களது ஒற்றுமையை தேசியத்துக்கு தெரிவிப்பதனூடாக எங்களது தேவைகளையும் அபிலாஷைகளையும் அடைந்து கொள்ளும் யுக்திகளை மக்களுடன் கலந்துரையாடும் மக்கள் சந்திப்பு பிரதி அமைச்சரின் சாய்ந்தமருது அலுவலக வளாகத்தில் 2018-01-22 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான தேர்தல் குழு தலைவர் ஏ.எல்.எம்.றசீட் (புர்க்கான்ஸ்) தலைமையில் இடம்பெற்றது. இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ், 

முஸ்லிம் காங்கிரஸையும், எனது அரசியல் வாழ்வையும் அஸ்தமனமாக்கவும் அந்தக் கட்சி காலூன்றிய இடத்திலிருந்து கட்சியை துடைத்தெறியவும் சிலரால் சூசகமாக தீட்டப்பட்ட சதியின் உச்ச கட்டமே சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையான உள்ளுராட்சிசபை  விடயத்தை துரும்பாக பயன்படுத்தி தன்னை சூழ்நிலைக் கைதியாக்கி சுற்றிவளைத்துக்கொண்டு வாக்குமூலம் பெற்றதாகவும் அதேவேளை சாய்ந்தமருதில் உள்ள சிலர் நான் அங்கு பேசியதை திரிபுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடிவருவதாகவும் தெரிவித்தார்.

மறைந்த தலைவரால் தூரநோக்குடன் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் ஊடாக அரசியல் அடையாளத்தைப் பெற்றவர்கள் அந்தக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களைச் செய்துவிட்டு கட்சியில் இருக்கும்வரைக்கும் முடியுமான சகலதையும் அனுபவித்து விட்டு  இப்போது அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த  அணிக்கு மாறி கட்சியை விமர்சித்து வருவதாகவும் இதனூடாக அவர்களது அஜந்தாக்கள் மக்களுக்கு விளங்கி வருவதாகவும் தெரிவித்தார்.


சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையைப் பெற்றுத்தருவதாக ஜெமில், பைசர் முஸ்தபா உள்ளிட்ட எல்லோரும் வாக்குறுதியளித்திருந்தார்கள் என்றும் இவர்கள் எல்லாம் ஏன் இந்த விடயத்துக்குள் மூக்கை நுழைத்தார்கள் என்பது அநேகருக்குத் தெரியும் என்று தெரிவித்த ஹரீஸ், கடந்த 2017  ஜூலை மாதம் வரை இந்த உள்ளுராட்சிசபை சம்மந்தமாக குறித்த அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர் புதிய ஒரு சட்டத்தை ஏற்பாடு செய்தார் என்றும் அது என்னவென்றால் முதலில் 70% மாக இருந்த வட்டார தேர்தல் முறை 60% மாக குறைக்கப்படுகின்றது. அதாவது 40%  விகிதாசாரமாக மாற்றப்படுகின்றது. என்றும் தெரிவித்தார்.

அது எவ்வாறு என்றால் கல்முனையில் முஸ்லிம்களுடைய ஆதிக்கம் 70% மாக இருந்து 60% மாக மாற்றப்படுகின்றது. அவ்வாறு குறைகின்றபோது சாய்ந்தமருதும் பிரிந்து சென்றால் முஸ்லிம்கள் கல்முனையை இழக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. இதனை யாரும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லை. இதே விடயத்தையே கல்முனை மக்கள் மதியிலும் தெளிவாகப் பேசினேன். இதையே சாய்ந்தமருது மக்கள் மத்தியிலும் தெளிவாக பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது. என்றும் தெரிவித்தார்.

பிரிப்பு விடயத்தில் சிறு சிக்கல் இருக்கின்றது என்பதை புரிந்துகொண்டும் சிலர் குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க முற்பட்டனர் என்றும் இந்த விடயத்தை இலகுவாக கையாளக்கூடிய விடயங்களை விட்டு விட்டு கல்முனையைச் சேர்ந்த ஜவாத் மற்றும் அவரது சகோதரர்கள் போன்றவர்கள் எனக்கு எதிராக விசமப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது எல்லோரும் அறிந்த விடயம் என்றும் தெரிவித்தார்.

ஏன் என்றால் கல்முனை நகரம் ஏனையவர்களின் கைகளுக்குச் செல்லப்போகின்றது என்ற தோரணையில் கூட்டங்களை நடாத்தி ஒரு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தினார்கள். அப்போது நாங்கள் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்துடன் பேசினோம் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை சுமூக நிலைக்கு கொண்டுவரும் வரை சிறு அவகாசத்தைத் தாருங்கள் என்று கேட்டிருந்தோம்.

 இந்த விடயத்தைக் கேட்டது அக்டோபர் மாதம் சாய்ந்தமருதில் ஹர்த்தால் நடைபெறுவதற்கு நான்கு ஐந்து தினங்களுக்கு முன்னர்  அவர்கள் எவ்வித இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை. இறுதியிலே கொழும்பில் பைசர் முஸ்தபாவின் அமைச்சில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது இங்கு பள்ளிவாசலின் தலைவர் ஹனிபா உள்ளிட்ட நம்பிக்கையாளர்கள் பலர் வந்திருந்தார்கள் அதில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நான் மற்றும் றிஷாட் உள்ளிட்டவர்களும் பங்கு கொண்டிருந்தோம் இதில் சாய்ந்தமருதின் முன்னாள் பிரதேச செயலாளர் சலீம் கூட கலந்து கொண்டிருந்தார். எல்லோரும் பேசி அப்போது ஒரு இணக்கப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்றும் தெரிவித்த ஹரீஸ்,

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சாட்டத்தினால் கல்முனையில் ஏற்படும் சிக்கலைத் தடுப்பதற்காக இதனை நான்காகப் பிரிப்போம்  உடனடியாக பிரதமரிடம் சென்று இதை நான்காகப் பிரித்து சாய்ந்தமருதுக்கு உடனடியாக ஒருசபை, கல்முனைப் பட்டினத்துக்கு ஒருசபை, மருதமுனைக்கு ஒருசபை, தமிழர்களுக்கு ஒருசபை என தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

அந்தத் தீர்மானத்தை இரண்டு தினங்களில் பிரதமரிடம் சென்று பேசி அதில் நான் இருந்தேன் பைசர் முஸ்தபா இருந்தார் தலைவர் றவூப் ஹக்கீம் இருந்தார் எல்லோரும் சேர்ந்து ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக  1987 ஆண்டுக்கு முன்பிருந்தவாறு பிரிப்பதற்கான கோரிக்கையை முன்வைத்தோம் என்றும்  இதனை உடனடியாக செய்து தாருங்கள் என்றும் கோரிக்கை முன்வைத்தோம் என்றும் நான்காகப் பிரியும்போது ஏற்படும் செலவுகள் தொடர்பில் அவர் கூறினாலும் உள்ள நிலைமைகளை நாங்கள் விளக்கியபோது அவர் எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

அதற்கான முன்னெடுப்புகளை உடனடியாக செய்யுமாறு  பைசர் முஸ்தபா, அம்பாறை கச்சேரிக்கு கூறியிருந்தார். அந்த உத்தரவு வந்தபின்னர் நவம்பர் மாதம் முதலாம் திகதி சாய்ந்தமருதின் மண்ணில் ஹர்த்தாலின் இறுதி நாள் அந்த ஆவேசமான சூழலில் உடனடியாக ஜனாதிபதி செயலகம் எஸ்.எஸ்.பி. ஊடாக தொடர்புகொண்டு வருகின்ற 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் கூட்டம் இருக்கின்றது எல்லோரையும் வரச்சொல்லுங்கள் என்ற தீர்மானம் வந்ததன் பின்னர் ஹர்த்தால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதிக்கு இடையில் அம்பாறை ஜி.ஏ நான்காகப் பிரிப்பதற்குரிய முடிவை எடுத்திருந்தார். அதற்கான ஆலோசனைகளை சாய்ந்தமருது கல்முனை பள்ளிவாசல்களிடமும் மருதமுனையுடனும் தமிழர்களிடமும் பெற்றிருந்தார். இங்கு நான்காகப் பிரிப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளும் முடிவுறுத்தப் பட்டிருந்தது என்றும் இவைகளை அமபாரை கச்சேரியில் பணிபுரியும் நிந்தவூரைச் சேர்ந்த நில அளவையாளர் றபீகிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தயும் வைத்து 15 ஆம் திகதி விடயம் நிறைவடைய இருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பு 3 மணிக்கு நடைபெறவிருந்த நேரத்தில் அன்று  காலையில் ஆஸாத் சாலியிடம் சென்று கதைத்ததனால் இந்தப் பிரச்சினையை அவர் வேறு ஒரு கட்டத்துக்கு கொண்டு சென்றார் அதன் காரணமாக் அன்று எட்டவிருந்த முடிவு பின்போடப்பட்டது.

அவர் தமிழ் கூட்டமைப்பு சம்மந்தனை இந்த பேச்சு வார்த்திக்கு கூப்பிட்டார். அதாவுல்லாவை கூப்பிட்டார் இவர்களது பிரச்சினை என்னவென்றால் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிசபையை முஸ்லிம் காங்கிரஸ் கொடுத்து விட்டால் அவர்களது கை ஓங்கிவிடும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற கொள்கையில் இருப்பவர்கள் எல்லாம் இணைந்து இந்த பேச்சு வார்த்திக்குள் தமிழ் கூட்டமைப்பைக் கொண்டு வந்த்ததனால் அன்று 15 ஆம் திகதி எடுக்க விருந்த தீர்மானம் பிட்போடப்பட்டது.

அங்கு சம்மந்தன் கூறினார் ஜீ.ஏ வின் அறிக்கைய இப்போது விவாதிக்க முடியாது எங்கட சமூகம் சார்ந்தவர்களுடன் பேசவேண்டும் என்றார். எல்லை விடயத்தில் சரியான தீர்மானம் எடுக்கவேண்டும் என்றார் பின்னர் அடுத்த குழுவினருடனான சந்திப்புக்கள் பத்தாம் திகதிவரை இடம்பெற்றது. இதன்போது தேர்தல் வந்ததால் பேச்சு வார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பெரிதாக்கிய ஜவாத் இப்போது மயிலுடன் சங்கமித்துள்ளார் அவர் மயிலுடன் சங்கமிப்பதற்கு முன்னர் என்னையும் கட்சியையும் அழிப்பதற்க்காக பல்வேறு முயச்சிகளை செய்திருந்தார்.

ஏனைய பிரதேசத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை நாங்களே பெற்றுத்தருவோம் அதற்காக எங்களது பேரம்பேசும் சக்தியை தேர்தலின் ஊடாக பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் ஏ.எல்.அப்துல் மஜீத் வேட்பாளர்களான கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர்கள் ஏ.ஏ.பஷீர்,எம்.ஐ.எம்.பிர்தௌஸ் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஏ.நசார்டீன் உயர் பீட உறுப்பினர் ஏ.சி.யஹ்யாகான்,எம்.எம்.எம்.பா மி மற்றும் ஏ.எம்.முபாறக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எம்.வை.அமீர் -
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post