தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jan 30, 2018

கூரையை உடைத்து நடுவீட்டில் விழுந்த முச்சக்கரவண்டிஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்பியன் தோட்ட குடியிருப்பு பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் 6 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

முச்சக்கரவண்டி குடியிருப்பு மீது வீழ்ந்ததில் குடியிருப்பின் கூரைப்பகுதி முற்றாக சேதமடைந்த நிலையில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகி அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அட்டன் பிரதேசத்திலிருந்து அக்கரப்பத்தனை கல்மதுர தோட்டத்திற்கு சென்றபோதே நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுமுச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 6 பேர் பயணித்துள்ளதாகவும், அதில் சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ் விபத்து நேர்ந்துள்ளதாகவும் முச்சக்கரவண்டி பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட குடியிருப்பில் உள்ளவர்களுக்கு உடைமைகள் மாத்திரமே சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Post Top Ad

Your Ad Spot

Pages