இனவாதிகளின் முழுமையான கூடாரமாக மாறிவிட்ட ஐக்கிய தேசிய கட்சி!இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஜிஹாத் எனும் நூலை வெளியிட்டு,இனவாதத்தை விதைத்ததில்  முதன்மையானவரான சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டம் நடந்திருப்பதானது,ஐக்கிய தேசிய கட்சியானது இனவாதிகளின் முழுமையான பிடிக்குள்சென்றுள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

இன்று ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு கூட்டமானதுஅமைச்சர் சம்பிக்கரணவக்க தலைமையில் இடம்பெற்றுள்ளதுஇந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்கதான் இனவாதிகளின் தந்தைஇன்றுஅதிகமாக துள்ளிக்கொண்டிருக்கும் ஞானசாரதேரரின் உள்ளங்களில் இனவாத சிந்தனைகள் பெருக்கெடுக்கஇவர் அந் நேரத்தில்வெளியிட்டு வந்த கருத்துக்களும் காரணமாக அமைந்திருக்கலாம்ஞானசார தேரர்மற்றும் அமைச்சர்  சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஒரு காலத்தில் ஒன்றாக பயணம்செய்தவர்கள்அதனைஅவர் தனது வாயாலேயே ஏற்றுக்கொண்டுமுள்ளார்.

இன்றும்இவர் தான்ஞானசார தேரரை இயக்குகுறாரா என்ற பலத்த சந்தேகம்உள்ளதுஅளுத்கமை கலவரத்தை தொடர்ந்துமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ ஞானசார தேரரை கைது செய்ய தயாரான போதுஅதனை இவரேதடுத்து நிறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன் வைத்துமுள்ளார்இப்படியான ஒருவர் ஐக்கிய தேசியகட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை நடாத்தும் அளவுஅக் கட்சியினுள்பலமிக்கவராக திகழ்கிறார்.

இதில் கவலையான விடயம் என்னவென்றால்ஐக்கிய தேசிய கட்சியானதுனவாதிகளின் முழுமையான பிடிக்குள் சென்றுள்ள போதும்எமது முஸ்லிம்மக்கள்அதிகம் ஐக்கிய தேசிய கட்சியையே ஆதரிக்கின்றனர்இன்னும்முஸ்லிம்மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பார்களாக இருந்தால்முஸ்லிம்கள் மிகக்கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதில் எந்தசந்தேகமுமில்லைஎதிர்வரும் தேர்தலில் முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியைஆதரிப்பதானது , தங்களது தலைகளை தாங்களே பொறிக்குள் வைத்துள் கொள்வதுபோன்றாகும்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியாகும் ஆசையில் இனவாதத்தை மிகவும்நிதானமாக கையாண்டு வருகிறார்இருந்தாலும்இடைக்கிடையே ஏதேனும்சொல்லிக்கொண்டே இருப்பார்இன்றுஅவர் பெரும் இனவாதியாக தோன்றாமல்இருக்கலாம்அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழுகூட்டத்தை நடாத்தியுள்ளார் என்பதற்கும் ஞானசார தேரர் ஐக்கிய தேசிய கட்சியின்மத்திய குழு கூட்டத்தை நடத்தியுள்ளார் என்பதற்கும் இடையில் எந்தவேறுபாடுமில்லைஎதிர்வரும் தேர்தலில் கட்சி சிந்தனைகளை மறந்துமுஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்து ஐக்கிய தேசிய கட்சியை எதிர்த்து பாடம்புகட்ட வேண்டும்.

 அஹமட்,
ஊடக செயலாளர்,
முஸ்லிம் முற்போக்கு முன்னனி.