தமிழ் கட்சியொன்றில் போட்டியிடும் பௌத்த பிக்கு!தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக பிரச்சார கூட்டம் லிந்துலை பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானும் இ.தொ.காவின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் பௌத்த பிக்கு ஒருவர் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவது முதன் முறையாக கருதப்படுகின்றது.
அத்தோடு இலங்கை வரலாற்றில் தமிழ் கட்சி ஒன்றின் ஊடாக பௌத்த பிக்கு ஒருவர் போட்டியிடுவது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.