இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் ஊழல்வாதிகளுக்கு இடம் கிடைக்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இருந்த தேர்தல் முறையில் அரசியல்வாதிகள் போன்றே அரச அதிகாரிகளும் ஊழலில் ஈடுபட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share The News

Post A Comment: