முஹம்மட் இர்சாத்

ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவை கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மிக கேவலமாக விமர்சித்த அதாஉல்லா இன்று மைத்திரியை தலையில் வைத்து கொண்டாடுவதாக குறிப்பிட்டுள்ளார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்,

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் உயிரைப்பணயம் வைத்து பிரச்சாரம் செய்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காரர்களையும், ஜனாதிபதியையும் மிக கேவலமாக பேசிய அதாஉல்லா இன்று ஜனாதிபதியை மிக மிக புகழ்கிறார், இதை விட கேவலமான அரசியல் இல்லை,

மைத்திரிபாலவுக்கு உடுப்பு போட தெரியாது, பஸ் அடித்த நாய், சிரிப்பும் அசிலும் என்று பேசிய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரின் இந்த பேச்சுக்களை ஆதாரங்களுடன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக குறிப்பிட்ட ஏ.எல் தவம்,

ஜனாதிபதி மைத்தரிபாலவுக்கு இழுக்கான செயல் செய்தவரை துாக்கி எறிய வேண்டும் என்றார். குறித்த ஆதராம் அடங்கிய கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share The News

Post A Comment: