உடைத்தெறிந்து பட்டாணிச்சூரின் ஆசனத்தை நாம் கைப்பற்றுவோம். - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

உடைத்தெறிந்து பட்டாணிச்சூரின் ஆசனத்தை நாம் கைப்பற்றுவோம்.

Share This


எமக்கெதிரான அனைத்து சவால்களையும் முறியடித்து பட்டாணிச்சூரின் அதிகாரங்களை இன்ஷாஅல்லாஹ் நாம் கைப்பற்றுவோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் தெரிவித்தார். 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடும்   வேட்பாளர் முகம்மத் பாயிஸ் மற்றும் வேப்பங்குளம் வட்டாரத்தில் போட்டியிடும் k.சபாநாதன் ஆகியோரை ஆதரித்து 
இன்று வவுனியா பட்டாணிச்சி புளியங்குளம் மற்றும் வேப்பங்குளம் ஆகிய வட்டாரங்களில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரை நிகழ்த்துகையிலேயே இதனைத் தெரிவித்தார். 

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சேனக்க அபேகுணசேகர அவர்களும் கலந்து சிறப்பித்த மேற்படி நிகழ்வுக்கு. வருகை தந்த அதிதிகளை ஊர்மக்கள் மலர்மாலை அணிவித்து மகத்தான வரவேற்பை அளித்ததுடன் பட்டாசுகள் முழங்கி உற்சாகமாக விழாமேடைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் எமது மக்களுடைய பல தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கும் காணப்படாத அபிவிருத்திகளுக்கும் ஒரு முடிவுரையை இந்தத் தேர்தல்  எழுதும், அதை மனதில் வைத்து இவ் வட்டாரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என வேண்டுகிறேன். 

இப்பிரதேசத்தில் பல அபிவிருத்திகளை செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். எனவும் குறிப்பிட்டார். 
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் பட்டாணிச்சூர் மற்றும் வேப்பங்குளம் போன்ற பகுதிகலுக்கான தேர்தல்  அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE