Jan 25, 2018

NAFEER FOUNDATION" வாழைச்சேனை,ஓட்டமாவடி மக்களுக்கு கூறுவது என்ன?



ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்


வாழைச்சேனை, ஓட்டமாவடி  பிரதேச சபைக்கு உட்பட்ட எல்லைக்குள் வாழுகின்ற உறவுகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். அன்பின் பணிவு.

நாபிர் பவுண்டேஷன் தற்பொழுது நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் " Sri Lanka Muslim Congress " (SLMC) இற்கு தமது பூரண ஆதரவினை தெரிவித்து கொள்கின்றது. ஏனென்றால்? இந்த தேர்தலில் தனித்து கிழக்கு மாகாணத்தில் களமிறங்கும் முடிவுடன் இருந்தது. அதன் அடிப்படையில் பரவலாக பிரதேச சபையில் நாபிர் பவுண்டேஷன் தனித்து களமிறங்குவதன் ஊடாக ஏதாவது செய்ய முடியுமா ? என சிந்தித்து பார்த்து தனது வேட்பாளர்களை தெரிவு செய்து ஆயத்தமாகவும் வைத்திருந்தது.

அந்த வேளையில், பிரதேசத்திற்கு துரோகம் செய்யக்கூடிய அரசியல் முகவர்கள் வன்னியை தலைமையாக கொண்டு இயங்ககூடியவர்களை எமது சொந்த பிரதேசத்திற்கு கொண்டு வந்து எமது பிரதேச அபிவிருத்திகளை அழித்தொழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருந்த நிலையில் நாபிர் பவுண்டேஷன் உம் களமிறங்குகின்ற பொழுது நிச்சயமாக இப்பிரதேசத்தின் அரசியல் அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்ற முடிவுற்கு வந்துள்ளது.

அந்தவகையில்" Sri Lanka Muslim Congress " (SLMC)  பலம் வாய்ந்த உறுப்பினர்களையே களமிறக்கியுள்ளது. எனவே நாங்கள் அனைவரும் வேறுபாடுகள், கருத்து முரண்பாடுகள் மற்றும் மனகசப்புக்கள் அனைத்தையும் மறந்து இம்முறை  வாழைச்சேனையில் மரச் சின்னத்திற்கு வாக்களித்தும் ஓட்டாமாவடி பிரதேச சபைகாக முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்பட்டு சுயற்சை குழுவில்  போட்டியிடும் வேட்பாளர்களை பிரதேச சபை உறுப்பினர்களாக தெரிவு செய்து பிரதேச சபையினை " Sri Lanka Muslim Congress " (SLMC) இன் கைகளில் வழங்குவதன் மூலம் குறித்த பிரதேச அபிவிருத்திகளை அடைய கொள்ள முடியும்.

அது மட்டுமல்லாது வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை வட்டாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மரச்சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.எம்.வாஸ்தீனை மீண்டும் வாழைச்சேனை பிரதேச சபைக்கு அனுப்பவதனூடாக பிறைந்துறைச்சேனை பிரதேசம் பல அபிவிருத்திகளையும், இன்ன பிற சமூக மேம்பாட்டு அம்சங்களையும் கொண்ட ஒரு கிராமமாக அபிவிருத்தி அடையும் என்பதில் எமது பெளண்டேசனிடம் மாற்றுக்கருத்தில்லை என்பதனை எமது பெளண்டேசன் பிறைந்துறை சேனை வாழ் மக்களுக்கு தெரிவித்துகொள்வதில் மகிழ்ச்சி அடைக்கின்றது.

அத்தோடு வாஸ்தீனை போன்ற பணத்திற்கு சோரம் போகாத உறுப்பினர்களை தெரிவு செய்கின்ற பொழுது வாழைச்சேனை பிரதேசத்தினை தலை சிறந்த நகரங்களுல் ஒன்றாகவும் காணமுடியும். அதனடிப்படையில்" Sri Lanka Muslim Congress " (SLMC)  இற்கு ஆதரவினை வழங்கி வாஸ்தீனை மீண்டும் உறுப்பினராக தெரிவு செய்யுமாறு நாபீர் பெளண்டேசன் சிபார்சு செய்கின்றது.

நன்றி-  ஊடகப் பிரிவு, நாபீர் பெளண்டேசன் - ஸ்ரீ லங்கா


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network