Feb 23, 2018

உள்ளுராட்சி தேர்தல் 2018 வெற்றிப்பாதையை நோக்கி மக்கள் காங்கிரஸ்!கலாபூஷணம் எஸ்.எம்.சஹாப்தீன்-

நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட – எண்ணிப்பார்க்கப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கடந்த 10ஆம் திகதி நடந்து முடிந்துவிட்டது. அதன் முடிவுகள் வெளியாகிஅரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திபலரின் சிந்தனையை முடுக்கிவிட்டிருப்பது இன்று ஊரறிந்த உண்மையாகிவிட்டது. உள்ளுராட்சித் தேர்தலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் கொதிநிலை மக்களை வெறுப்படையச் செய்துள்ளது. அதற்குக் காரணம் இத்தேர்தல் நாட்டில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி இருப்பதுதான். தேர்தல் முடிவுகள் நல்லாட்சி அரசுக்கு சாதகமாக இல்லாமையால், அரசியல் ஸ்திரமற்ற சூழல் உருவாகியுள்ளது. இதில் எல்லாக் கட்சிகளுமே தத்தம் பலத்தை பரீட்சித்துப் பார்த்த நிலைக்கு ஆளாகியுள்ளன. இந்தக் கட்சிகளுள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலையையும்பெற்ற விலையையும் சற்று சிந்திப்பது பயனுடையதாகும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாட்டின் பென்னாம் பெரிய கட்சியோபெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியோநீண்டகால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட கட்சியோ அல்ல. இக்கட்சி கடந்த 2010இல் அங்குரார்ப்பணஞ் செய்யப்பட்டுநான்கு ஆண்டுகளில்  2014 இல் அரசியல் ராஜபாட்டையில் அடியெடுத்து வைத்து நடக்கத்துவங்கிய, ன் அரசியல் பயணத்தை ஆரம்பித்து, நாட்டு மக்கள் அனைவரினதும், மூவினத்தாரினதும் விடியலுக்காகப் பணி செய்யத் துவங்கிய கட்சியாகும் என்பதுநாடும், ஏடும் அறிந்த உண்மையாகும்.

மக்கள் காங்கிரஸ் இந்த எட்டு வயதில் ( 2010-2018) இந்தளவு சுறுசுறுப்பாக வளர்ச்சி காணவும்தேசந் தழுவி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் களத்தில் போட்டியிட பக்குவமும் - பலமும் பெற்றமைக்கு அடிப்படை காரணம்அதனை வழிநடத்தும் தலைவராகிய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்ற யதார்த்தத்தை அரசியல் அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். “தலை சரியாக இருந்தால் எல்லாம் சரி” என நம் பாட்டியார் சொல்லும் ஜனரஞ்சக வார்த்தைகள்இந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரை நூறு சதவீத உண்மையேயாகும். 
இந்த உண்மையை நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் உறுதி செய்கின்றன. எப்படி என்கிறீர்களா

பெப்ரவரி 10 இல் நடந்து முடிந்த பிரஸ்தாப தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும்ஐக்கிய மக்கள் கூட்டமைப்பாகவும்தனித்தும் போட்டியிட்டது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ். 15மாவட்டங்களில் அபேட்சகர்களை களமிறக்கிமொத்தம் 166ஆசனங்களைப் பெற்றுள்ளமைஇலங்கை வரலாற்றில் பெரும் வெற்றியாகும்இதோ… வெற்றி பெற்றோரின் விபரப்பட்டியல்:-

1.மன்னார்-  349.  குருணாகல்-  5
2.அம்பாறை-  3110.  அநுராதபுரம்-  4
3.திருகோணமலை -  1811.  களுத்துறை-  2
4.வவுனியா-  2012.  கொழும்பு-  2
5.மட்டக்களப்பு-  14 13.  கிளிநொச்சி     -  2
6.முல்லைத்தீவு-  12 14.  யாழ்ப்பாணம்-  1
7.கண்டி-  08  15.  கம்பஹா        -  1
8.புத்தளம்-  12

மொத்தம் 166 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

நாட்டிலுள்ள மற்ற பென்னாம் பெரிய கட்சிகளுடன் ஒப்பிடும்போதுஇந்த குறுகிய எட்டாண்டு கால வளர்ச்சிஇந்தளவு நிறுத்தப்பட்ட 15மாவட்டங்களிலும் 166 பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளனர் என்ற தேன் செய்திஅரசியல் அரங்கில் அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்ந்துள்ளது. இதற்கு காரணம்அக்கட்சித் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கடுமையான முயற்சியும்தூர நோக்குடன் திட்டமிட்ட அரசியல் வியூகமுமேயாகும் என்றால்அக்கூற்று பொய்யல்ல. 

வெற்றி பெற்ற உறுப்பினர்களின் விபரப்பட்டியலை நோக்கமிடத்து வட புலத்தில் மன்னார்வவுனியாமுல்லைத்தீவுகிளிநொச்சியாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலும்கிழக்கு மாகாணத்தில் அம்பாறைதிருகோணமலைமட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும், மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருப்பதுஅக்கட்சியை வலுவடையச் செய்துள்ளது என சாதாராண மக்களும் பேசத் தலைப்பட்டுவிட்டனர்.

அதேவேளைகொழும்புகண்டிஅநுராதபுரம்களுத்துறைபுத்தளம், கம்பஹா போன்ற மாவட்டங்களிலும் மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்கள் தெரிவாகியிருப்பதுகுறுகிய காலத்தில் இக்கட்சி பெற்றுள்ள மக்கள் செல்வாக்கை சொல்லாமற் சொல்கிறது. 

அதுமட்டுமா?  சம்மாந்துறைஓட்டமாவடிமாந்தை மேற்கு – மாந்தை கிழக்கு போன்ற பிரதேச சபைகளில் இணைந்து நிர்வகிக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை இத்தேர்தல் முடிவுகள் தோற்றுவித்திருப்பதன் மூலம்இக்கட்சி மக்கள் ஆதரவைவரவேற்பை பெருவாரியாகப் பெற்றிருப்பதை புரியவைக்கிறது. 


இத் தேர்தல் மக்கள் காங்கிரஸை விட வளர்ச்சியும்முதிர்ச்சியும் கண்டதாக சொல்லப்படும் கட்சிகளின் வெற்றி ஆசனங்கள்அவை வாக்கு வங்கியில் பாரிய பின்னடைவை கண்டிருப்பது சூசகமாக சுட்டிக்காட்டுகின்றன. இது மக்களின் விருப்பம் எத்தகையது என்பதை உணர்த்தி நிற்கிறதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
ஓட்டுமொத்தமாக இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கட்சிகள் போட்டியிட்டதையும்அதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்ற வெற்றி ஆசனங்களையும் அலசி ஆராய்ந்து பார்க்கும்போதுமக்கள் காங்கிரஸ் மகத்தான வெற்றியையும்வளர்ச்சியையும் கண்டுள்ளமை குன்றின் மேலிட்ட விளக்காக தெட்டத் தெளிவாகின்றது.

இத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் உண்மை என்னஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தோற்றம்அதன் படிப்படியான வளர்ச்சிநாட்டில் எழும் - எரியும் பிரச்சினைகளை அக்கட்சியின் தலைவரும்,அமைச்சருமான ரிஷாத் பதீயுதீனின் அணுகுமுறைகாய் நகர்த்தும் சாணக்கியம்மக்கள் தலைவரின் வியூக நடவடிக்கைகளை உள்வாங்கும் விதம்அதனால் மக்களிடம் அத்தலைவருக்கும்கட்சிக்கும் கிட்டும் வரவேற்பு என்பனவற்றை நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் அங்கீகரித்துள்ளன என்பதையே காட்டுகிறது. இதே வழியில் இக்கட்சி செயற்படுமேயானால் நாளடையில் நாட்டின் பிரதான அரசியல் சக்தியாக தோற்றம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. 

TM.Imthiyas

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network