Header Ads

ad728
  • Breaking News

    கிரேன்பாஸில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி




    கொழும்பு - கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டடிம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

    இன்று மதியம் 3.15 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

    தேயிலை களஞ்சிய கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து வீழந்துள்ள நிலையில் , இதில் காயமடைந்த நபர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்குண்டுள்ள மேலும் சிலரை மீட்கும் பணியில் காவற்துறையினரால் ஈடுபட்டு வருகின்றனர்.

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728