தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 6, 2018

படையினர் வசமிருந்த காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் 75 சதவீதம் பூர்த்தி


காங்கேசன்துறையில் இருந்து பருத்தித்துறை வரையிலான ஏபி-21 நெடுஞ்சாலை இன்று தொடக்கம் மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த வீதி 1990 ஆம் ஆண்டு ஜூன் 20ம் திகதி தொடக்கம் மூடப்பட்டிருந்தது. இது மீண்டும் திறக்கப்படுவதால் மக்களின் பயணத் தூரம் 50 கிலோமீற்றரால் குறைவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வடக்கில் படையினர் வசமிருந்த காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் 75 சதவீதம் பூர்த்தியாகி உள்ளன. எஞ்சிய காணிகளையும் விரைவில் விடுவிக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினார்.
எதுவித பேதமும் இன்றி யாழ்ப்பாண மக்களுக்கு அபிவிருத்தியில் நீதியை நிலைநாட்ட ஜனாதிபதி என்ற ரீதியில் தாம் பாடுபட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். நாட்டில் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப தாம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வடக்கிலும், தெற்கிலும் உள்ள மக்கள் ஒன்றாக சேர்ந்து தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் நோக்கம் சுதந்திரமான ஜனநாயக சமூகத்தை உருவாக்குவது தான் அந்த அபிலாஷைகளை நிறைவேற்ற கடந்த மூன்றாண்டுகளில் கணிசமான வேலைத்திட்டங்களை நிறைவேற்றியதாக அவர் கூறினார்.

Post Top Ad

Your Ad Spot

Pages