(ஹஸ்பர் ஏ ஹலீம்)

எதிர்வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு மயில் சின்னத்துக்கு வாக்களிப்பதனாலும் அதிக படியான வாக்குப் பலத்தால் வெற்றியடைய செய்வதனாலும் முஸ்லீம் சமூகம் வடகிழக்கில் மாத்திரமல்ல முழு நாட்டு முஸ்லீம்களும் தலை நிமிர்ந்து வாழ முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கிண்ணியா நகர சபை பெரியாற்று முனை வட்டாரத்தில் போட்டியிடும் நிஸார்தீன் முஹம்மட் நேற்று(31) அவரது இல்லத்தில்  நடைபெற்ற மக்கள் உடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது முஸ்லீம் சமூகத்தின் முழு மூச்சாக எமது தேசிய தலைவர் றிஸாத் பதியூதீன் இருந்து வருகிறார் எங்கெல்லாம் எமது சமூகத்துக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இரவு பகல் பாராது குரல் கொடுக்கின்ற ஒரே தலைவனாக அவர் காணப்படுகிறார்.

இந்த நாட்டில் இனவாத மதவாத சக்திகள் அவரை எவ்வளவோ அப்பட்டமான மோசமான பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் நேர்மையாக கன்னியமாக தங்களின் கட்சியையும் முஸ்லீம் சமூகத்தையும் நேசிக்கின்ற ஒரு நல்ல மனிதராக இருக்கின்றார்.

.இந்த வட்டார தேர்தலை பொறுத்தமட்டில் வட்டாரங்கள் அபிவிருத்தியடைவதே இலக்காக கொண்டு தேர்தல் முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது கடந்தகால விகிதாசார தேர்தல் முறையில் கிண்ணியா நகர சபை ஊடான கண்டு கொண்ட சபை எமது வட்டார அபிவிருத்திக்கு போதிய பங்களிப்பு கிடைக்கவில்லை இம் முறை நாம் சபையை கைப்பற்றுகின்ற போது முழு சமுதாய நலன் கருதி மக்களின் அபிவிருத்திகளுக்கும் மதரீதியான விடயங்களுக்கும் மார்க்க விழுமியங்களுக்கு கட்டுப்பட்டு முன்னின்று மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்போம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை கடந்த கால வரலாறுகள் தேர்தலில் மக்கள் பணத்தை கொள்ளையடித்த சுருட்டிய வரலாறுகளும் ஊழல் மோசடிதாளர்களும் இருந்தார்கள்.

 இம் முறை கிண்ணியா நகர சபையில் ஊழல் மோசடியற்ற சபையாக மாற்றி மக்களுக்கான வரவு செலவுத் திட்டங்களையும் கண் முன்னே காட்சிப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுப்போம் தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொகளை கூறுமளவிற்கு சிலர் வாக்குகளை பெறுவதற்காக மக்களை ஏமாற்றி வருகிறார்கள் அவ்வாறான போலிகளை கண்டு மக்கள் ஏமாறவேண்டாம் ஒட்டு மொத்த சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எமது கட்சி இந்த நகர சபையை கைப்பற்றுவதன் ஊடாக தீர்வுகளை முன்வைக்கும் அதிக சாத்தியமான நிஜமான கதைகளை நாங்கள் மக்களுக்கு கூறுகிறோம்.

 இந்த சபைகளின் வெற்றி எமது மக்களின் வெற்றியே அன்றி தங்களுக்கான பக்கற்றுகளை நிரப்பும் வெற்றியல்ல பெரியாற்று முனை வட்டார மண் பெரிய கிண்ணியா,பெரியாற்று முனை,எகுத்தார் நகர் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது இம் மண்ணை பொறுத்தமட்டில் கடந்த கால அரசாங்கம் கட்சிபேதம் பார்த்து அபிவிருத்தியில் பல புறக்கணிப்புக்களை செய்து வந்தது இனிமேலும் அவ்வாறான விடயங்கள் நடைபெறமாட்டாது இனியாவது சித்தித்து மயில் சின்னத்துக்கு வாக்களித்து அபிவிருத்திக்கு இட்டுச் செவோம் என்றார்..

Share The News

Post A Comment: