இலங்கையர் என்றடிப்படையில் நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் முன்வரல் வேண்டும் - ரோஹித போகல்லாகம - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

இலங்கையர் என்றடிப்படையில் நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் முன்வரல் வேண்டும் - ரோஹித போகல்லாகம

Share This


ஹஸ்பர் ஏ ஹலீம்

70வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு இணையாக திருகோணமலை மாவட்ட சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று திருகோணமலை பிரட்ரிக்கோட்டை வளாக கடற்கரை பிரதேசத்தில் கிழக்க மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவின் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.

எமக்கு பின்னர் சுதந்திமடைந்த பல உலக நாடுகள் எம்மை பின்தள்ளி துறைசார் ரீதியாக முன்னேற்றமடைந்து காணப்படுவதாகவும் ஆனால் நாம் அந்த நாடுகளை பார்க்கிலும் பிந்திய நிலையில் நிற்பதாகவும் அனைவரும் இலங்கையர் என்றடிப்படையில் தாய் நாட்டை கட்டியெழுப்ப திடசங்கற்பம்புமூண வேண்டும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம தெரிவித்தார்.

முன்னர் கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்திற்கும் இன்று கொண்டாடப்படுகின்ற சுதந்திர தினத்திற்கும் இடையே பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. ஜனநாயகம் வலுவான ஒரு காலகட்டத்தில் இன்றைய சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. ஜனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தின கீழ் பல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டு நலன்கருதி செயற்படுவது முக்கியமான அரசியல் திருப்புமுனையாக காணப்படுகின்றது.

சுதந்திரத்திற்கு பின்னர் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பௌதீக ரீதியான அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்தியதாகவும் இன நல்லுறவு மற்றும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப கூடிய கவனம் செலுத்தவில்லை.

ஆனாலும் கிழக்கு மாகாணம் பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டதும் பல்லின மக்கள் இணக்கமாண முறையில் வாழ்கின்ற ஒரு மாகாணமாகும். ஏனைய மாகாணங்களுக்கு கிழக்கு மாகாணம் நல்லிணக்கம் சார்ந்த விடயங்களில் முன்னுதாரணமாக காணப்படுகின்றது. 

உலகிற்கு ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வெளிக்கொணர்கின்ற ஒரு மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது. நிலையான அபிவிருத்தியோடு தொடர்புடைய வகையில் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவகின்றது. 

இவ்வருடம் பல அபிவிருத்தி திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் அமுலாக்கப்படவுள்ளது. கடந்த வருடம் 1200 பட்டதாரிகள் மற்றும் 300 டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவ்வருடமும் பட்டதாரி நியமனம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப்இ கிழக்கு மாகாண பிரதம செயலாளர்டி.எம்.எஸ்.அபேகுணவர்தன திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார முப்படை பொலிஸ் சிவில் பாதுகாப்புபடை அதிகாரிகள் அரச அதிகாரிகள் இபாடசாலை மாணவர்கள்இ பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE