முர்தளா ஹமீட்

தைக்காநகர் பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்தை விற்ற குதிரைக்கட்சிகாரர்கள் தொடர்பான விடயம் பற்றி அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்,

குறித்த கட்சியின் முன்னாள் பிரதேச சபை வேட்பாளர் மற்றும் அவரது கும்பல்கள் சேர்ந்தே இதனை செய்துள்ளது, அது மாத்திரமின்றி இவர்கள் பல ஊழல்களை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கலாச்சார அமைச்சு ஆகியவற்றிற்கு  அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த நபர் இதனை விற்று தன்னுடைய சொந்த பணமாக மாற்றி அதில் கும்பல்களுக்கு பங்கு கொடுத்துள்ளார், விற்றது ஒரு ஏழை விதவை தாய்க்கு என்பத குறிப்பிடத்தக்கது.

எமது செய்தியாளருக்கு பிரத்தியேக புட்டியளித்த அவர்,

தேர்தல் காலத்தில் இந்த விடயம் தொடர்பில் ஏன் இதனை சொல்கிறேன் என்றால் குறித்த கட்சிக்கும்பல்கள் தொடர்ந்தும் மோசடி ஊழல் செய்கின்றனர், பள்ளிவாசல் எனும் பொதுச்சொத்தை அரசியலுக்குள் தள்ளி அதிலும் உழைக்கின்றனர் மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

Share The News

Post A Comment: