Feb 11, 2018

அக்கரைப்பற்று வர்த்தக சங்கத்தின் அறிக்கையால்தான் தேசிய காங்கிரஸ் வென்றதுஅக்கரைப்பற்று வர்த்தகர்கள் சங்கம்  இறுதியாக வர்த்தகர்களையும் பொதுமக்களையும் விழித்து விடுத்த உருக்கமான அறிக்கையானது ஓரிரு நிமிடங்களில் சகல சமுக வளைதளங்களுக்கும் உள்வாங்காங்கப்பட்டுள்ளது மட்டுமன்றி அக்கரைப்பற்று மக்கள் மனதில்  ஒரு பசுமைப்புரட்சியை ஏற்படுத்தியதாகேவ சிலோன் முஸ்லிம் கருதுகிறது.

தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று வர்த்தகர்கள் சங்கம் ஓர் வேண்டுகோளை விடுத்தது,   அந்த அறிக்கை கீழ்வருமாறு.

அன்பின் அக்கரைப்பற்று வர்த்தகர்கள் பொதுமக்களுடன் அக்கரைப்பற்று வர்த்தகர்கள் சங்கம் சில நிமிடங்கள். 

உள்ளூராட்சி தேர்தலுக்கு வாக்களிக்க இன்னும் சில பொழுதுகளே உள்ளன.அக்கரைப்பற்று மக்கள் தமதூரின் துயரம் நிறைந்த அரசியல் வரலாற்றை இந்த மண்ணின் விசுவாசத்தோடு சிந்தித்தும் சீர்தூக்கியும் வாக்களிக்க வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் இருக்கிறோம்.1965 க்குப் பின்னரான 35 வருட அரசியல் வெற்றிடத்தால் இந்த ஊர் இழந்தது அதிகம். அபிவிருத்தியின் நிழல் கூட பட்டிருக்காத இந்த மண்ணின் நிலைமை ஒரு புறமிருக்க 1977 ல் தமதூர் இருக்கும் கூறுகளாக பிரிக்கப்பட்ட அநியாயத்தை நினைத்து இன்னுமே நாம் அழுதுகொண்டே இருக்கிறோம். அக்கரைப்பற்றுக்கெதிரான
இன்னுமேஅன்பின் அக்கரைப்பற்று வர்த்தகர்கள் பொதுமக்களுடன் அக்கரைப்பற்று வர்த்தகர்கள் சங்கம் சில நிமிடங்கள்.
உள்ளூராட்சி தேர்தலுக்கு வாக்களிக்க இன்னும் சில பொழுதுகளே உள்ளன.அக்கரைப்பற்று மக்கள் தமதூரின் துயரம் நிறைந்த அரசியல் வரலாற்றை இந்த மண்ணின் விசுவாசத்தோடு சிந்தித்தும் சீர்தூக்கியும் வாக்களிக்க வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் இருக்கிறோம்.1965 க்குப்9 பின்னரான 35 வருட அரசியல் வெற்றிடத்தால் இந்த ஊர் இழந்தது அதிகம். அபிவிருத்தியின் நிழல் கூட பட்டிருக்காத இந்த மண்ணின் நிலைமை ஒரு புறமிருக்க 1977 ல் தமதூர் இருக்கும் கூறுகளாக பிரிக்கப்பட்ட அநியாயத்தை நினைத்து இன்னுமே நாம் அழுதுகொண்டே இருக்கிறோம்.
 அக்கரைப்பற்றுக்கெதிரான சூழ்ச்சிகளும் அரசியல் வாதிகளின் வக்கிரங்களும் இன்னும் இந்த ஊரின் மீது படிந்திருக்கிறது.2000ம் ஆண்டில் அதாஉல்லா என்ற ஒரு மகத்தான மனிதரின் வரவு நம்மை நிமிர்த்தி உட்காரவைத்து,அபிவிருத்தியின் பெயரால் இந்த ஊர் இழந்தவைகளையும் இந்த ஊருக்கு அவசியமானவைகளையும் 15 வருட இடைவெளியில் பூரணப்படுத்தி எமது மனங்களை குளிரவைத்ததை நாம் எப்படி மறந்து விட முடியும்?அரசியல் வங்குரோத்து காரர்கள் ஊரைவிற்று சமுதாயத்தை அடகுவைத்து தமது சுயநலமான இலக்குகளை அடைய இந்த ஊரின் அபிவிருத்திகளை விமர்சிக்கும் அளவுக்கு இறங்கியுள்ளனர். சரியான திட்டமிடலோடு காலம் கடந்தும் நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியையே நமது மண்ணின் மைந்தன் அதாஉல்லா செய்திருப்பதை தேசிய அபிவிருத்திகளை அறிந்திருக்கும் புத்தி ஜீவிகள் கூறுகிறார்கள்.இம்மாதம் 10 ம் தேதி எமது மண்ணுக்கு வரலாற்று முக்கியத்துவமான ஒரு நாள். எமது சந்ததியினர் வாழவும் அவர்களுக்கு சுபீட்சம் நிறைந்த ஓர் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பலம் எமது கைகளில் உள்ள வாக்கு பலம் மட்டுமே. 
2015 க்குப் பிறகு எமதூரின் அரசியல் வெற்றிடம் கடந்த 35வருட அரசியல் வெற்றிடத்தை விட பாரதூரமானது என்பதை சற்று ஆழமாக சிந்தியுங்கள். 

தற்போது வாக்களிக்க இருக்கும் தேர்தல் மாநகர சபை சபைக்கு உரியதாகும். பிரதேச சபை அந்தஸ்திலிருந்த எங்களை நகர சபை அமைப்புக்கு உள்வாங்காது மாநகர சபைக்கு எங்களை உள்வாங்கிய திறமையை இன்னும் கற்பனை பண்ண முடியாத ஒன்றாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட மாநகர சபை சிற்பி உயிரோடு இருக்கும் போது எந்த மனதுடன் எதிர்த்து வாக்களிக்க முடியும்?பாராளுமன்றத் தேர்தலில் எம்மிடேயே ஒற்றுமை இல்லாமையால் நாம் தோல்வி கண்டபோது இலங்கை மட்டுமன்றி வெளிநாட்டிலும் நாம் செய்த துரோகமே பேசு பொருளானது.அப்படி என்றால் இந்த மாநகர சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் தோல்வி கண்டால் நாம் செய்யும் அத் துரோகம் வரலாற்று பேசு பொருளாக நிலைத்து விடும் என்பதை சற்று ஆழமாக சிந்தித்து பாருங்கள்.
தேசிய காங்கிரஸின் அபிவிருத்தியின்சுகங்களை அனுபவித்து கொண்டு இருக்கும் நாம் அந்த தலைவனுக்கு செய்யப்போகும் கைமாறு என்ன?
எனவே துரோகம் இளைக்காத நன்றி உடையவர்களான ஒரு சமூகமாக
அக்கரைப் பற்று மக்கள் இருப்பதையே அக்கரைப்பற்று வர்த்தகர்கள் சங்கம் விரும்புகிறது.
எம். எம். எம். லியாக்கத்தலி.
தலைவர்.
அக்கரைப்பற்று வர்த்தகர்கள் சங்கம்.SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network