Feb 23, 2018

மர்ஹூம் தலைவர் அஷ்ரபை பின்பற்றும் தலைமை என்றால் அது றிசாதே!


சப்னி அஹமட்-

இலங்கையில் இன்று முஸ்லிம் காங்கிரஸின் எனும் கட்சியை வீழ்த்தி சாதனை பெற்றுவரும் புதிய கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பலமான மக்கள் பணியுடன் ஆரம்பித்துள்ளதுடன். தன் மீது தானே மண்ணை அள்ளிப்போட்ட நிலையில் மு.கா தலைவர் ஹக்கீம் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.   இலங்கை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் தலைமைகளில் மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முதன்மையானவர் இவர் முஸ்லிம்களுக்கான ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி அதன் மூலம் நம் முஸ்லிம் சமூகத்திற்கான உரிமைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொடுக்க முன்வந்தவரே! இவரை இன்று வரை எம் முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொண்டு ஆரம்ப தலைமையாக இனம்கண்டு வைத்துள்ளனர். அதில் ஓர் போராளிதான் இன்றையை எம் சமூகத்தலைவனும், அமைச்சருமன றிஷாத் பதியுத்தீன் அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

முஸ்லிம் சமூகம் சீரளிந்த எமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான நேரம் இல்லாத போது எம் தலைவன் அஷ்ரப் அவர்களினால் ஒரு தியாகத்துடன் உருவாக்கப்பட்டதுதான் இன்றைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்போது அக்கட்சி உருவக்காத்தின் போது தலைவரினால் பல அரசியல் பிரமுகர்களை அன்று போராளியாக இணைந்தும், பலர் இணைந்தும் அதுவே எமக்கான கட்சி என்ற அடிப்படையில் நம்பி பல வருட காலங்கள் அங்கிருந்த அரசியல் வாதிகள் செயற்பட்டார்கள். அதன் பின் அத்தலைமை இயற்கை எய்தியதுடன் இன்றைய மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அத்தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன் இன்றுவரை பல முக்கியஸ்தர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்கள் மு.கா கட்சியை விட்டு வெளியேறியதன் நோக்கம் சமூக சார் பிரச்சினைகளுக்கும் முஸ்லிம்களின் உரிமைகளுக்கும் தற்போதைய தலைமை பேசமால வாய்மூடி மெளனியாக இருந்ததும், அக்கட்சியில் இருந்த ஸ்தாபக மூறை மாற்றம் செய்யப்பட்டதுமே. ஆனால் இவற்றில் பலர் பிரிந்து கட்சிகளை ஆரம்பித்ததும் சிலர் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதுடன், சிலர் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றார்கள்.

அன்று வெளியேறிய அமைச்சர் றிசாத் பதியுத்தீன் இன்று மு.கா தலைமை ஹக்கீமுக்கு சவாலாக மாறியதையும், ஹக்கீமுக்கு றிசாத் ஓர் தலையிடியாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக அமைச்சர் றிசாத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் கட்சியொன்றை ஆரம்பித்து அன்று மர்ஹூம் தலைவர் எவ்வழியில் செல்ல முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தாரோ அதே பாதையில் இவர் செல்வதை மிகத்தெட்ட தெளிவாக மக்கள் புரிந்துகொண்டனர். குறிப்பாக சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக நசுக்கப்படும் அநீதிகளுக்கு உடனடியாக குரல் கொடுத்து எவ்வித அரசியல் அச்சமும் இல்லாமலும், பணம் பதவிக்கு சோரம் போகாமல் செயற்பட்டதை மக்கள் அறிந்து கொண்டார்கள். 2005ஆம் ஆண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டாலும் தனது ஆற்றலினால் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கை முஸ்லிம்கள் செறிந்து வாழும் மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்த மனிதனாக சித்தரிக்கப்படுகின்றார்.

2005 காலப்பகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இந்நாட்டு முஸ்லிம்களிடம் ஏகோபித்த கட்சியாக இருந்தாலும் அதன் பின் அதாவுல்லா அணியின் கட்சி கிழக்கில் சில இடங்களில் காலூண்டி கிழக்கில் மு.கா. தே.கா எனவும் ஐக்கியதேசிய கட்சி எனவும் பெரிய சவாலாக இருந்து வந்ததை தொடர்ந்து. அமைச்சர் றிசாத் பதியுத்தீனுன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சில முக்கியஸ்தர்களுடன் தங்களது ஆதரவுத்தளத்தினை தெரிவித்ததையடுத்து அக்கட்சி வடக்கிலும், கிழக்கிலும் இன்னும் காலூண்ட ஆரம்பித்த பின் மு.கா தலைவர் ஹக்கீம் மீதான விமர்சனங்களும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப்பற்றி பேசாமல் அமைதி காத்த தலைவராக ஹக்கீம் வர்ணிக்கப்பட்டதை மக்கள் புரிந்து அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையிலான கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்தனர்.

அதில் குறிப்பாக இதுவரை காலத்தை விட நடைபெற்ற 2018 உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது அமைச்சர் றீசாத் பதியுத்தீனுடைய கட்சிக்கு தங்களுக்கு முழு ஆதரவையும் வட-கிழக்கு மற்றும், ஏனைய இலங்கையின் பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள ஆதரவுகளை வழங்கியதுடன் எவ்வித முறையும் இல்லாத போல் ஹக்கீம் இம்முறை வீழ்ந்து அமைச்சர் ரிசாத்தின் கட்சி மேலோங்கி காணப்பட்டதை இம்முறை உள்ளுராட்சிமன்ற தேர்தல் ஓர் சாட்சியமாக உள்ளது.

குறிப்பாக அம்பாறை மாவட்டம் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மிகப்பிரதானமான மாவட்டமாக அம் மாவட்டத்தில் கூட இம்முறை ஒரு சபைகளையும் கைப்பற்ற முடியாத நிலையும், இம்முறையே சிறந்த முறையில் தேர்தலில் களமிறங்கிய றிசாத் பதியுத்தீன் வெற்றிவாகை சூடிஉள்ளார் என்பது சாதனைக்குறிய விடயமாகும். இதற்கான பிரதான காரணம் மர்ஹூம் எம் தலைவர் அஷ்ரப் அவர்களின் வழியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் செயற்பாடாமல் கட்சியின் யாப்பு, கட்டமைப்புக்கள் மாற்றப்பட்டு தனிநபர்களுக்கு கூஜா தூக்கும் கட்சியாக மாறியதே இதற்கு பிரதான காரணமாகும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுத்தீன் எனும் ஆளுமை மர்ஹூம் தலைவரின் வழிகாட்டலில் இயங்கும் தலைமை என இச்சமூகம் ஏற்றுக்கொண்டதுடன், அத்தலைமை உண்மையில் மர்ஹூம் தலைமையை சாயலில் செயற்படும் தலைமை ஒரு சிறந்த தலைமைக்குள் இருக்கும் பன்பு அமைச்சர் றிசாத்திடம் உண்டு, மக்களின் பிரச்சினைகளுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் அன்மைக்காலமாக குரல் கொடுத்த முஸ்லிம் தலைமை என்றால் அது றிசாதே, தலைமை பொறுப்பை ஆசைப்பட்டு பெற்றுக்கொண்டவர் அல்ல, சமூகத்திற்கு ஊழல் செய்யாத தலைவன்  என இலங்கையில் உள்ள அரசியல் தலைமைகளும் மக்கள் ஏற்றுக்கொண்டதில் எவ்வித மாற்றுக்கருத்தும் அல்ல.  உலக அரசியலில் முக்கிய பங்கை வகிக்கும் இலங்கை அரசியலில் றிசாத் முக்கிய அங்கை வகிக்கின்றார். 

இதேவேளை, மர்ஹூம் தலைவர் அஷ்ரப் அவர்களை பிழையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் போராளி ஒருவர் கூறியதாகவும் அதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மீது வீண் பழி சுமத்துவதை மு.கா போராளிகளால் நகைப்புக்குறிய விடயமாக பார்க்ககூடியதாக உள்ளது.  அமைச்சர் றிசாத் பதியுத்தீன் மீது ஊழல் என்ற போர்வையை உருவாக்கியதே இந்த மு.கா போராளிகளே.! ஆகவே இவ்வாறு நீங்கள் போலியாக சுமத்தப்படும் சுமைகள் நாளை உங்களுக்கே விதிக்கப்படும் என்பதை புரிந்துகொள்ளாமல் நடப்பதை விட்டு மு.கா கட்சித்தலைமை மீதும் அவ் கட்சி உறுப்பினர்களிடமும் உள்ள பிழைகளை திருத்தி கட்சி மூலம் ஏதும் நல்லது செய்ய முடியுமா என சிந்திப்பது போராளிகலுக்கும், அதனை வழிநடாத்தும் அரசியல்வாதிகளுக்கும் சாலச்சிறந்ததாகும்.SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network