ஸ்ரீ.ல.சு.கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டுழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எமது வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நான் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக பொறுப்பேற்று குறுகிய காலத்தில் வன்னி மாவட்டத்தில் எமது கட்சி அடைந்து வரும் துரித  வளர்ச்சியில் எமது கட்சியின் தலைவரும் நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்களும் எமது கட்சியும் மிகுந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் கொண்டிருக்கும் இத்தருணத்தில் எமது வன்னி மாவட்டத்தின் முன்னேற்றத்தில் இன்னும் கரிசனையுடன் நாம் செயற்படுவோம் என்பதையும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். 

 

நன்றி,
காதர் மஸ்தான் 
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும். 

பிரதம அமைப்பாளர்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...