தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 7, 2018

ஓட்டமாவடி சபீர் மெளலவியினை பற்றி பிரதமர் ரணில் கூறிய விடயத்தின் கருப்பொருள் என்ன.?
ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்


வீடியோ - வீடியோ - www.youtube.com/watch?v=eAcEV78eMJY&feature=youtu.be

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்காக முஸ்லிம் காங்கிரசில் மரச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றியடைய செய்யும் முகமாக நேற்று செவ்வாய் கிழமை 05.01.2018 வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலுக்கு அருகாமையில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையும் அமைச்சருமான அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கீம் பிரதம பேச்சாளராக கலந்து சிறப்பித்தார்.

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையின் வெற்றி வேட்பாளராக முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானை சின்னத்தில் போட்டியிடும் எம்.பி.எம்.வாஸ்தீனின் அழைப்பின் பெயரில் சமூக சேவைகள் நிறுவனமான நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும், பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் குறித்த பொதுக்கூட்ட மேடையில் கட்சியின் தலைமை ரவூப் ஹக்கீமிற்கு முன்னாள் பகிரங்கமாக தனது ஆதரவினை முஸ்லிம் காங்கிரசிற்கு தெரிவித்து அம்பாறை மட்டக்களப்பு மக்களுக்கான முக்கிய உரையினை நிகழ்த்தினார்.

கல்குடா பிரதேசத்தில் சில வருடங்களாக முக்கிய பேசும் பொருளாகவும், சமூக சேவைகளை செய்து வரும் குறித்த நாபீர் பெளண்டேசனின் தலைவர் நாபீர் இவ்வாறு பகிரங்கமாக முஸ்லிம் காங்கிரசிற்கு ஆதரவினை வழங்கி வாழைச்சேனை பிரதேச சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைகளில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை வெற்றியடைய செய்வதற்கு தனது பங்கினை வழங்கியுள்ளமையானது கல்குடா பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசிற்கு வலுச்சேர்க்கும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

இதனை மேலும் உறுதிப்படுத்தும் முகமாக முஸ்லிம் காங்கிரசின் தலைமை ரவூப் ஹக்கீம் உறையாற்றும் பொழுது மிகக் கூடுதல் கவனம் எடுத்து நாபீர் பெளண்டேசனை புகழ்ந்து நன்றி செலுத்திய விடயம் அரசியல் விமர்சகர்களின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயமாகவும் இருக்கின்றது.

பொதுக்கூட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Post Top Ad

Your Ad Spot

Pages