ரணில் விலகினாலே மஹிந்தவை முறியடிக்க முடியும் - ஜனாதிபதி
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ பலம்­பெற்­றுள்­ள­மை­யினால் அவ­ரது செயற்­பா­டு­களை முறி­ய­டிக்கும் வகையில் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யுள்­ளது. இதனால் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து தாங்கள் விலகி கரு ஜெய­சூ­ரி­யவை பிர­த­ம­ராக நிய­மித்து நல்­லாட்­சியை கொண்­டு­செல்­வதே சிறந்­தது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் தெரி­வித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார். இந்தப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது பிர­த­ம­ருடன் அமைச்­சர்­க­ளான மலிக் சம­ர­விக்­கி­ரம, மங்­கள சம­ர­வீர, சாகல ரத்­நா­யக்க ஆகியோர் பங்­கேற்­றுள்­ளனர். ஜனா­தி­ப­தி­யுடன் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் மகிந்­தர அம­ர­வீர பங்­கேற்­றுள்ளார். 

ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நடை­பெற்ற இந்த சந்­திப்பில் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் மஹிந்த அணி­யினர் வெற்றி பெற்­றமை குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. இதன் போதே மஹிந்த பலம் பெற்­றுள்­ள­மை­யினால் அவ­ரது செயற்­பா­டு­களை முறி­ய­டிக்கும் வகையில் நாம் முடி­வு­களை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. இதனால் கரு ஜெய­சூ­ரி­யவை பிர­த­ம­ராக்கி அடுத்­த­கட்ட நகர்­வு­களை முன்­னெ­டுப்­பதே சிறந்­தது என்று ஜனா­தி­பதி பிர­த­ம­ரிடம் சுட்­டிக்­காட்­டி­ய­தாக நம்­ப­க­ர­மாக தெரிய வரு­கின்­றது. 

ஜனா­தி­பதி இவ்­வாறு கருத்து தெரி­வித்­த­தை­ய­டுத்து அமைச்சர் மங்­கள சம­ர­வீர இதற்கு எதி­ராக கருத்து தெரி­வித்­துள்ளார். அவ்­வாறு செயற்­பட முடி­யாது என்றும் நாங்கள் தனித்து ஆட்சி அமைப்­ப­தற்கு தயார் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­ய­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. 

இந்தச் சந்­திப்­பின்­போது ஐக்­கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைக்க முயன்று அதற்கு சிறி­லங்கா சதந்­திரக் கட்­சி­யினர் யாரா­வது ஆத­ரவு வழங்­கினால் அத்­த­கை­ய­வர்­களை அமைச்­சர்­க­ளாக நிய­மிக்க நான் இணங்கப் போவ­தில்லை என்றும் ஜனா­தி­பதி கூறி­ய­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...