தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 5, 2018

அபிவிருத்திகளை செய்து விட்டுத்தான் வாக்குகள் கேட்கிறோம் பொய்யான வாக்குறுதிகளை நம்பாதீர்கள்

நாங்கள் கடந்த காலங்களில் செய்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்து விட்டுத்தான் உங்களிடம் வாக்குக் கேட்கிறோம் பொய்யான வாக்குறுதிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நேற்று(04) கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்

இந்த தேர்தலை சிலர் சாதாரண தேர்தல் இது ஒரு குடும்பத் தேர்தல் ,சிறிய தேர்தல் என கூறுகிறார்கள் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸை பொறுத்தவரைக்கும் இந்த தேர்தலானது மாகாண சபையை பாராளுமன்ற தேர்தலை விடவும் மிக முக்கியமான தேர்தலாகும்.சிலர் இங்குள்ள அபிவிருத்திகளை குழப்புவதற்கும் குட்டையை குழப்புவதற்குமாக செயற்படுகின்றார்கள் வெறுமென அடிக்கல்லை மாத்திரமே நட்டுவைப்பார்கள் ஆனால் வேலைத் திட்டங்கள் நடைபெறுவதில்லை கடந்தகாலங்களில் இப்படியான அடிக்கல்லை நடுவதென்றால் இந்த மாவட்டத்தில் 1000 கற்களை நாட்டியிருப்பேன்.

 பொய்யான வாக்குறிகளை கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற அபிவிருத்திகளை கூட செய்ய தடுக்கும் இவர்கள் இவர்களின் கட்சிகளில் இருந்து  தவிசாளர் நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டால்   இங்கு என்ன நடக்கும் என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.

கடத்த கால கிண்ணியா அரசியல் வரலாற்றில் அன்றைய அமைச்சர்களாக இருந்த மர்ஹூம்களான அப்துல் மஜீத்,எம்.ஈ.எச்.மஹ்ரூப் பல அபிவிருத்திக்கான கனவுகளை கண்டிருந்தார்கள் ஆனால் அவர்களால் செய்து முடிக்கவில்லை அதை தான் இந்த தௌபீக் செய்து காட்டியும் செய்யவும்  இருக்கின்றான்.

கிண்ணியா கடல்மேல் பாலம் முடிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் மகாவலி நீரை குரங்குபாய்ந்தான் குளத்துக்கு திசை திருப்பும் முயற்சியில் சுமார் 675 கோடி ரூபாய்க்களில் இவ் விவசாய திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளோம்.சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பல அபிவிருத்திகளை செய்து விட்டுத்தான் இன்று வாக்குகளை கேட்கின்றது கடந்த 1994 களில் இந்த கட்சி திருகோணமலை மாவட்டத்தில் தனித்து நின்று தேர்தலில் வெறும் 440 வாக்குகளை மாத்திரமே பெற்றது.

 ஆனால் இன்று கட்சியின் வாக்கும் வளர்ச்சியும் வளர்ச்சி கண்டுள்ளது .தற்போதைய அமைச்சராக இருப்பவர் றிசாத் பதியுதீன் கிண்ணியா மண்ணுக்கு செய்த சேவைதான் என்ன ஒரு ஐந்து சதவீதமேனும் சேவை செய்யவில்லை 2004 தொடக்கம் 2010 வரை மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது கிண்ணியா பகுதிகளில் மீள்குடியேற்றக் கிராமங்களான சோலைவெட்டுவான்,நடுஊற்று,மயிலப்பன்சேனை,உப்பாறு என்று காணப்பட்டது அன்று எதை செய்தார்.எனவேதான் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் கிண்ணியா மண்ணை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் என்றார். 

Post Top Ad

Your Ad Spot

Pages