இலங்கையில் விசித்திரமான பாடசாலை அம்பாறை மாவட்டத்தின் மானம் கப்பலேறுகிறதா? - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

இலங்கையில் விசித்திரமான பாடசாலை அம்பாறை மாவட்டத்தின் மானம் கப்பலேறுகிறதா?

Share This


சிலோன் முஸ்லிம் செய்தியாளர்

அம்பாறையில் இரண்டு மாணவர்களுடன் ஒரு பாடசாலை இயங்குகின்றது.
அம்பாறை கல்வி வலயத்திலுள்ள 103 பாடசாலைகளில் ஒரே ஒரு தமிழ் பாடசாலையாக அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் விளங்குகின்றது.

அம்பாறை தமிழ் மாகாவித்தியாலயம் 1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரிய கல்வி பாரம்பரியத்தினை கொண்ட பாடசாலையாக காணப்படுகின்ற போதிலும் தற்போது கவனிப்பாரற்ற நிலையிலுள்ளது.

இந்த பாடசாலையில் கல்வி பயின்ற பலர் உயர் நிலைகளில் உள்ள​போதிலும் தற்போது இரு மாணவர்கள் மாத்திரமே கல்வி பயில்கின்றனர்.

சாதாரண தரம் வரையுள்ள இந்த பாடசாலை, தற்போது அதிபர், ஒரு ஆசிரியர் இரு மாணவர்களுடன் இயங்கிவருகின்றது.

இந்த பாடசாலையில் கற்றல் செயற்பாடுகளுக்குரிய பொளதீக வளங்கள் அனைத்தும் காணப்படுகின்ற போதிலும், மூடப்படும் அபாய நிலையிலுள்ளதாக மக்கள் கூறிகின்றனர்.

அரசியல் பின்னணி மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக மாணவர்கள் அம்பாறை தமிழ் மகாவித்தியாலயத்திற்கு மாணவர்கள் வருகைதருவதில்லை என பாடசாலை அதிபரும், மக்களும் கூறுகின்றனர்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE