Feb 7, 2018

பேருவளையில் வாக்காளர் அட்டைகளை விலைக்கு வாங்கிய கும்பல் கைது!


FILE PIC

வேட்பாளர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க வாக்காளர்களின் அடையாள அட்டடைகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை விலைக்கு வாங்கிய இருவரை பொலிஸார் பேருவளையில் கைது செய்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேலும் சந்தேக நபர்களிடமிருந்து ஆறு அடையாள அட்டகைள் மற்றும் ஐந்து வாக்காளர் அட்டைகளும் மீட்கப்பட்டதாக தெரிவித்த அவர் 18000 ரூபா பணம் கொடுக்கப்பட்டது ஊர்ஜிதம் ஆகியுள்ளது என்றும் தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post