ஓட்டமாவடிக்கான தவிசாளர் விடயத்தில் அமைப்பாளர் றியாழ் சாதுரியமான முடிவினை எடுப்பாரா.?ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்


கல்குடா பிரதேசத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் முக்கிய அரசியல் கோட்டையாக கடுதப்படுகின்ற மீராவோடை பிரதேசத்தில் முன்னாள் தவிசாளராக இருந்ததோடு அமீர் அலியின் முக்கிய அரசிய செயற்பாடாளாரகவும் கருதப்பட்ட கே.பி.எஸ்.ஹமீட் கடந்த பிரதேச சபை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமை கல்குடாவில் மட்டுமல்லாது, ஓட்டமாவடி பிரதேச சபையின் அரசியல் வரலாற்றில் முக்கிய பேசும் பொருளாக மாறியுள்ளது.

முன்னாள் தவிசாளர் ஹமீட்டை மீராவோடையில் தோற்கடிக்கடிக்க முடியும் என்றால் அது அமைப்பாளராகவும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கிய கணக்கறிஞர் றியாழினால் மட்டுமே முடியும் என்ற முஸ்லிம் காங்கிரசின் போராலிகள் மத்தியில் இருந்த எதிர்பார்பிற்கு மத்தியில் கணக்கறிஞர் றியாழின் நூறு வீத விருப்பத்திற்கு அமைவாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், ஆசிரியியருமான எஸ்.ஏ.அன்வர் மீராவோடையில் களமிறக்கப்பட்டு 865- 730 வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் தவிசாளர் ஹமீட்டை தோற்கடித்து முக்கியமான வெற்றிக்கு மத்தியில் மீராவோடை பிரதேசத்தினை முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக மாற்றி அமைத்துள்ளார்.

இந்த நிலையில்.. ஓட்டமாவடி பிரதேச சபையின் அரசியல் வரலாற்றில் பெரும் தலைவர் அஸ்ஸஹீத் எம்.எச்.எம்.அஸ்ரஃபின் காலம் தொடக்கம் இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரசினால் ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியினை கைப்பற்ற முடியாமல் இருப்பது கல்குடா அரசியலில் முக்கிய விடயமாக இருந்து வருகின்றது. இதனை முற்றிலும் தவிடு பொடியாக்கும் வகையில் மீராவோடை கிழக்கில் களமிறக்கப்பட்ட அன்வர் ஆசிரியர் தவிசாளர் ஹமீட்டை தோற்கடித்து முஸ்லிம் காங்கிரஸ் ஓட்டமவாடி பிரதேச சபையின் வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் முஸ்லிம் காங்கிரசின் கையில் கொடுத்துள்ளமை கணக்கறிஞர் றியாழ் தனது அரசியல் வாழ்க்கையில் தான் நகர்த்திய அரசியல் காய் நகர்த்தலுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகவே கருதுவார் என்பதும் மறுபக்க உண்மையாகும்.

அதன் அடிப்படையில் கடந்த காலத்தில் முழுமையாக ஓட்டமாவடி பிரதேச சபையில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் குழுவில் உறுப்பினராக இருந்து அதற்கப்பால் அவருடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயற்பட்ட அன்வர் நிருவாக செயற்பாட்டாளராகவும், கணக்கறிஞர் றியாழின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவும், பிரதேசத்தில் மதிக்கப்பட்ட கூடிய நன்மதிப்புள்ள ஒருவராகவும் இருந்து வருகின்றார்.

ஆகவே எதிர் காலத்தில் நாட்டில் எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல், திடீர் அரசியல் மாற்றங்கள் என்பவற்றினை கருத்தில் கொண்டும், கல்குடாவின் முஸ்லிம் காங்கிரசினுடைஅ அரசியல் இஸ்தீர தன்மையினை கருத்தில் கொண்டும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கான அரசியல் அதிகாரம் எனும் தவிசாளர் பதவியினை முஸ்லிம் காங்கிரசின் தலைமை மீராவோடை கிழக்கு வெற்றியாளன் அன்வர் ஆசிரியருக்கு வழங்குவதற்கு கணக்கறிஞர் றியாழ் முழு மூச்சுடன் செயற்படுவது காலத்தின் கட்டாய கடமை என்பதற்கு அப்பால் எனது தனிப்பட்ட கருத்தாகவும் இருக்கின்றது.

எது எவ்வாறு இருந்தாலும் ஓட்டமாவடி பிரதேச சபையினை கூடாட்சி மூலம் யார் ஆட்சி அமைக்கப்ப போகின்றார்கள் என்பதில்தான் எல்லாம் தங்கி இருக்கின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...