அம்மை நோய் பரவுவதையிட்டு தொற்று ஏற்பட்டால் உடன் அறிவிக்கவும்!ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியாவை அண்மித்த சில பகுதிகளில் அம்மை நோய் ஏற்படுகிறது எனவே பொது மக்களாகிய  உமது பகுதியில் அம்மை நோய் ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார பொது பரிசோதகருக்கு உடன் அறிவிக்குமாறு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.அஜீத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தொற்று நோய்களிலிருந்து  முன்கூட்டியே பாதுகாக்க நடவடிக்கைகளை திட்டமிட்டு எடுத்து வருவதாகவூம் இவ் விடயம் தொடர்பில் கிண்ணியா வாழ் பொது மக்களுக்கு மதஸ்தலங்கள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை ஒவ்வொரு மதஸ்தலங்களில் உள்ள அறிவித்தல் பலகையில் பார்வையிட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...