வாங்கிக் கட்டிய சுமந்திரன், சபாநாயகரும் எச்சரிக்கை! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

வாங்கிக் கட்டிய சுமந்திரன், சபாநாயகரும் எச்சரிக்கை!

Share This


2018ஆம் ஆண்டு, வரவு - செலவுத் திட்டத்துக்கு, ஆதரவு வழங்குவதற்காக, 20 மில்லியன் ரூபாயை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம், நாடாளுமன்றத்தில் நேற்று சூடுபிடித்திருந்தது.

இந்தச் சலசலப்பையடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அமருமாறும், இல்லையேல் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றிவிடுவதாகவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்தார்.

 “வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு, 20 மில்லியன் ரூபாயை, இலஞ்சமாக நாங்கள் பெற்றதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சிவசக்தி ஆனந்தன், எம்மீது குற்றம் சுமத்தியுள்ளார். இது, எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது” என சுமந்திரன் எம்.பி குற்றம்சாட்டினார்.

இதன்போது எழுந்த, சரவணபவன் எம்.பி, “இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இதனிடையே எழுந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி, “வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குமாறு எமக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதற்கு நாம் மறுப்புத் தெரிவித்தோம். பொருளாதார அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படும் என்ற காரணத்தைக் காட்டியே, இதற்கு ஆதரவு வழங்குமாறு கோரப்பட்டது” என்றார்.

சிவசக்தி ஆனந்தனின் கூற்றைக்கு கடுமையான எதிர்ப்பை சுமந்திரன் எம்.பி வெளிப்படுத்தினார். இதன்போது, அக்கிராசனத்தில் இருந்த சபாநாயகர், சுமந்திரன் எம்.பிக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்து, அமருமாறு கூறினார்.

எனினும், சிவசக்தி ஆனந்தன் எம்.பி தெரிவித்த கருத்தை ஹன்சாட்டிலிருந்து இருந்து நீக்க வேண்டுமென, சுமந்திரன் எம்.பி கோரிக்கை விடுத்தார்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE