தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 6, 2018

அதான் (பாங்கு) க்கு தடைவிதித்த நீதிமன்றம்!ஜேர்மனியில் உள்ளூர் மசூதி ஒன்றில் வாராந்திர தொழுகைக்கான அழைப்புக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள நகரம் Oer-Erkenschwick, இங்குள்ள மசூதி ஒன்றுக்கே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நகரத்தில் வசிக்கும் கிறிஸ்தவ தம்பதியினர், muezzinஇன் தொழுகைக்கான அழைப்பு தங்களது மத உரிமைகளை மீறுவதாக உள்ளதாக புகாரளித்துள்ளனர்.

அவர்கள் கூறுகையில், இந்த சத்தம் எங்களைத் தொந்தரவு செய்கிறது, அதைவிட அந்த அழைப்பின் கருத்துதான் முக்கியம், ஏனெனில் அது அவர்களது கடவுளை எங்கள் கடவுளுக்கு மேலாகச் சொல்லுகிறது. ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தில் வளர்ந்த என்னால் அதை ஏற்றுகொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

புகார் கூறிய தம்பதியின் வழக்கறிஞர் கூறுகையில், இதை கிறிஸ்தவ தேவாலய மணியோசையுடன் ஒப்பிடமுடியாது, ஏனெனில் அது ஒரு ஒலி, muezzinஇன் அழைப்போ வார்த்தைகளால் நிறைந்தது, அதுமட்டுமின்றி இந்த அழைப்பு மற்றவர்களையும் கேட்கும்படி கட்டாயப்படுத்துகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

இதனை விசாரித்த நீதிமன்றம், தொழுகைக்கான அழைப்பை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், மத சுதந்திரம் என்னும் முறையில் இந்த வழக்கை அணுகாமல், முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மசூதி மீண்டும் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு குறித்து மசூதி நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான Huseyin Turgut கருத்து தெரிவிக்கையில், மசூதி நிர்வாகம், தொழுகைக்கான அழைப்பு 2 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கிறது, அதுவும் வெள்ளிக்கிழமைகள் மட்டுமே. இதுவரை நாங்கள் இத்தகைய புகார்களைப்பற்றிக் கேள்விப்பட்டதில்லை என தெரிவித்துள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages