பஹ்த் ஜுனைட்

காத்தான்குடியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தோழர் அனுர குமார திசாநாயக்க அவர்கள்  இந்த நாட்டில் இரண்டு நீதிகள் இருக்க முடியாது  இங்கு ஒரு தேர்தல் கூட்டம் நடைபெறும் போது பக்கத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கூட்டத்தின் ஒலி இங்கு கேட்கிறது இது தேர்தல் சட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகும் இவருக்கு என்று ஒரு நீதி இல்லை அவ்வாறாக இருக்குமாயின் நான் பாராளுமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன் என்று தெறிவித்த அவர் தொடர்ந்து உரையாற்றும் போது

இந்த நாட்டில் உள்ள அரசியல் வாதிகள் தேர்தல் காலம் வந்துவிட்டால் மக்கள் மத்தியில் புதிய குழப்பங்களை ஏற்படுத்தி இனங்களுக்கு இடையே பிரிவுகளை தோற்றுவித்து மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கிக் கொண்டு தலை நகரம் சென்று பெரிய அரசியல்வாதிகளிடமும் கட்சிகளிடமும் விலை பேசுகிறார்கள் இவர்கள்  மக்களின் வாக்குகளுக்கு விலை பேசும் வியாபாரிகள்..

மக்கள் மத்தியில் சண்டையை மூட்டி விட்டு  இவ் அரசியல் வாதிகள் ஒற்றுமை உல்லாசமாக இருக்கிறார்கள் ..

மக்களே.!! இனிமேல் இவர்களின் ஏமாற்று பேச்சை நம்பாமல் அனைத்து மக்களும் இன, மத,மொழி வித்தியாசம் இல்லாமல் ஒற்றுமையாக வாழவேண்டும் இதுவே மக்கள் விடுதலை முன்னணியினது கோரிக்கையாகும் என தெரிவித்தார் ..

இவ் மக்கள் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்து நெத்தி உட்பட மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர்கள், தொண்டர்கள், தோழர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்..

Share The News

Post A Comment: