அரசியலிலிருந்து தவம் ஓய்வு?; பதவிகளையும் துறக்க தயார் - அப்படி என்ன நடந்ததுமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபை - பிரதேச சபையில் ஒரு வெற்றி ஆசனத்தையும் தவம் பெற்றிருக்கவில்லை இது முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய பின்னடைவாகும்.

கடந்த முறையாவது ஒரு உறுப்பினரை பெற்றிருந்தது (ஹனீபா மதனி) 4 ஆசனங்களை ஆகக்குறைந்தது வெல்வோம் என தவம் குறிப்பிட்டிருந்தார் ஆனால் அது நடக்கவில்லை, இதனால் விரக்தி நிலையடைந்த அவர் தான் முஸ்லிம் காங்கிரசில் வகிக்கும் பதவிகள் மற்றும் இதர அரசியல் பணிகளில் இருந்து ஓய்வு எடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்