Feb 7, 2018

சம்மாந்துறை பிரதேச சபைக்காக போட்டியிடும் மு.கா வேட்பாளர் ஒருவர் மீது நேற்று இரவு தாக்குதல்



எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபைக்காக போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர் ஒருவர் நேற்று இரவு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீரமுனை வட்டாரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடும் றம்சீன் என்பவரே இவ்வாறு அடையாளம் தெரியாதவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

எனினும், குறித்த வேட்பாளர் யாரால் தாக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post