தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 14, 2018

வெற்றிபெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வர்த்தமானிக்கு


உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் எதிர்வரும் வாரம் வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
அதேவேளை உள்ளாட்சி மன்றங்களுக்கு இந்த முறை அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதால், உள்ளாட்சி மன்றங்களில்கூட்டங்களை நடத்தும்போது இடவசதிகள் தொடர்பான பிரச்சினை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இதனைத் தெரிவித்துள்ளார். எனவே, அத்தகைய உள்ளுராட்சி அதிகார சபைகள்குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ரோஹன ஹெட்டியாரச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages