சு.க. அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டும்!ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு விலகினால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டங்களில் இது பற்றி பேசப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்...
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பல்வேறு அரசியல் தீர்மானங்கள் பற்றி பேசப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்.
அவர்கள் முதலில் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலக வேண்டும் அதன் பின்னர் நமக்குள் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது குறித்து பேச முடியும்.

அரசாங்கத்தை விட்டு விலக வேண்டும் என்பதே எமது அடிப்படை நிபந்தனையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...