திருடர்களாக சொகுசு வாகனங்களுடன் அணிவகுப்புகளாக செல்கின்றவர்கள் தான் ஆட்சி மாற்றத்தை நினைக்கின்றனர்
(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருடர்களாக சொகுசு வாகனங்களுடன் அணிவகுப்புகளாக செல்கின்றவர்கள் தான் ஆட்சி மாற்றத்தை நினைக்கின்றனர் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்  நேற்று(04) இடம்பெற்ற உள்ளூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து முள்ளிப்பொத்தானையில்  இடம்பெற்ற உரையொன்றின்போது தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரை ஆற்றுகையில்

நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலையில் மாத்திரமே ஐக்கிய தேசிய கட்சி தனித்து போட்டியிடுகிறது சிறுபான்மை அமைச்சர்களின் ஆதிக்கத்தையும் தாண்டி ஐக்கியதேசிய தேசிய கட்சியின் தனித்துவத்தை பாதுகாத்த நாங்கள் இந்த தேர்தலில் வெற்றியுடனே வீடு திரும்புவோம்.


மேல் மாகாணத்தில் உள்ள அமைச்சர்களினால் வெற்றி சூட. நாங்கள் நினைக்கின்ற எங்களை அப்பட்டமாக பொய் வாக்குறுதிகளை கூறி வீடு தாறேன் வேலைவாய்ப்பு தருகிறோம் என்று பம்மாத்து காட்டிக் கொண்டு சமூகத்தை இரண்டு இலட்சம் மக்களை ஏமாற்றிக் கொண்டு குயிலும் மயில் என்றும் குதிரை வாழைப்பழம் என்றும் எமது மாவட்ட இளைஞர்கையும் ஏமாற்றி நாடகமாடுகின்றனர்.


மக்களை இன்னும் பத்து வருடத்துக்கு ஏமாற்ற இரட்டை கொடி மரம் வெத்திலை என்று கடந்த ஆட்சி வாய் திறக்க விடாதவர்களின் அரசியலை இன்று வேசம் போட்டுக் கொண்டு பொது பல சேனா கட்சி கட்சியையும் ஆதரிக்கவர்களாக இரவை பகள் என நினைத்துக்கொண்டு பண முடிச்சை ஏந்திக் கொண்டு வெட்கம் இல்லாமல் அலைந்து திரிகின்றார்கள் காத்தான் குடியில் ஒரு கட்சியும் அக்கரைபற்றில் ஒரு கட்சியும் என்று இனஒற்றுமையை சீர் குலைக்க மஞ்சல் சால்வையுடன் வேட்டியுடனும் வேசம் போட்டு நாடாகம் நடித்துக் கொண்டு திரிகின்றார்கள்.


இனவாதத்தை கக்கும் இந்த சிறுபான்மை கட்சிகளை பெப்ரவரி 11 உடன் திருகோணலையை விட்டு விரட்டி அடிப்போம். இதை அறிந்தே தற்போது வீடு வீடாக சென்று உங்களுக்கு வீடு தருகிறோம், வேலை தருகிறோம் என வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். கடந்த இருபது வருடங்களாக இவர்களின் கட்டுப்பாட்டிலேயே இங்குள்ள பெரும்பாலான சபைகள், மாகாண சபை காணப்பட்டது. இருந்தும் இவர்களால் இங்குள்ள மக்களுக்கு ஒரு செங்கல்லை கூட வழங்க முடியவில்லை. ஐக்கியதேசிய கட்சியால் வழங்கப்பட்ட பாடசாலைகள் வீடுகளிலேயே மக்கள் இன்றும் வசிக்கின்றனர்.

ஆகவே, மத்திய அரசில் அதிகாரத்தில் உள்ள எம்மிடம் இந்த சபைகளின் அதிகாரங்களை கையளியுங்கள். அன்று எனது தந்தை காலத்தில் காணப்பட்ட ஐக்கியதேசிய கட்சியின் யுகத்தை மீண்டும் இங்கு ஏற்படுத்தி காட்டுகிறோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...