Feb 20, 2018

மஹிந்­தவால் எதிர்க்­கட்சி தலைவர் பத­வியில் இருக்க முடி­யாது



(எம்.மனோ­சித்ரா)
ஒரே கட்­சியில் உறுப்­பி­னர்­க­ளாக காணப்­படும் இருவர் ஜனா­தி­ப­தி­யா­கவும் எதிர்­கட்சி தலை­வ­ரா­கவும் இருக்க முடி­யாது. அவ்­வாறு ஒரு சம்­பவம் இடம்­பெ­று­மாக இருந்தால் அது பாரா­ளுமன்ற சட்ட திட்­டங்­க­ளுக்கும் பாரம்­ப­ரி­யத்­திற்கும் முர­ணா­ன­தாகும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு எதிர்க்கட்சி தலைவர் பத­வியை வழங்க வேண்டும் என்ற கருத்­துக்கள் தொடர்பில் குறிப்­பி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அங்­கத்­த­வ­ரா­கவே உள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலைவர் ஆவார். எனவே ஒரே கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­ப­வர்கள் ஒரே நேரத்தில் நாட்டை ஆளும் ஜனா­தி­ப­தி­யா­கவும், எதிர்க்கட்சி தலை­வ­ரா­கவும் இருக்க முடி­யாது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெர­முன நடை­பெற்று முடிந்த உள்­ளூராட்சி தேர்­தலில் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்­றி­ருந்­தது. நாட்டில் எதிர்­பா­ராத திருப்­பத்தை இத் தேர்தல் முடி­வுகள் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. இந்­நி­லையில் நாட்டில் தேசிய அர­சாங்­கத்தில் பாரிய நெரிசல் ஏற்­பட்­ட­தோடு பிர­தமர் பதவி தொடர்­பிலும் பல்­வேறு சிக்­க­லான கருத்­துக்­களும் பல்­வேறு தரப்­பி­ன­ராலும் முன்­வைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய தேசிய கட்சி என்­பன இணைந்து உரு­வாக்­கி­யி­ருந்த தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து ஸ்ரீ.ல.சு.க வில­கினால் எந்­த­வித நிபந்­த­னை­களும் இன்றி, அமைச்­சுக்­களை ஏற்­காது வெளியில் இருந்து ஆத­ரவு வழங்க தயா­ராக உள்­ள­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமுன தெரிவித்துள்ளது. இந் நிலையில் தற் போது எதிர்க்கட்சி தலைவர் பதவியிணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ­பக் ஷவுக்கு வழங்க வேண்டும் என்ற பரிந்து ரைகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கதாகும்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network