இலங்கையில் இளவயதினர், பாதுகாப்பற்ற முறையில் இணையத்தை பயன்படுத்தல் - ஐ.நா. கவலை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

இலங்கையில் இளவயதினர், பாதுகாப்பற்ற முறையில் இணையத்தை பயன்படுத்தல் - ஐ.நா. கவலை

Share This


இலங்கையில் இளம் பராயத்தினர் பாதுகாப்பற்ற முறையில் இணையத்தை பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இணையத்தின் முழுமையான அனுகூலத்தை இலங்கை சிறார்கள் பெற்றுக் கொள்ளவும், பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ளவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் இணையப் பயன்பாடு தொடர்பில், பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 11 – 18 வயதுகளுக்கு இடைப்பட்ட வயதினர் மத்தியில், இணைய வசதிகளைப் பெற்றுக் கொள்கின்றவர்களில் 67.6 சதவீதமானவர்கள் ஆண் சிறார்களாக உள்ளனர்.

பெண் சிறார்களில் 33.1 சதவீதமானவர்களே இணைய வசதியை கொண்டுள்ளனர். அத்துடன் பிரதேச ரீதியாக நகர் புறங்களைச் சேர்ந்தவர்களே அதிக இணைய வசதியைக் கொண்டிருப்பதாகவும், கிராமப் பகுதிகளில் 33.1 என்ற குறைந்த அளவானவர்களே இணைய வசதியை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளில் 47.1 சதவீதமான அளவினரே இணைய வசதியைக் கொண்டிருக்கின்றனர்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE