தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Feb 6, 2018

மத்திய முகாம் தேர்தல் கருத்தரங்கு!
(அகமட் எஸ். முகைடீன்)

நாவிதன் வெளி பிரதேச சபைத் தேர்தலில் மத்திய முகாம் 6ஆம் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஐ. தஜாப்தீனை ஆதரித்து நேற்று (5) திங்கட்கிழமை குறித்த வட்டார பிரதேசத்தில் தேர்தல் கருத்தரங்கு நடைபெற்றது. 

இக்கருத்தரங்கிற்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை வேட்பாளருமான மாஹிர் மற்றும் நாவிதன் வெளி பிரதேச சபைத் தேர்தலில்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஏனைய வேட்பாளரகள் கலந்துகொண்டனர்.

Post Top Ad

Your Ad Spot

Pages