ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வினை மிகவும் வெற்றிகரமாக ஒழுங்கு செய்தமைக்காக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன வெகுவாக பாராட்டியுள்ளார். 

காத்தான்குடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவரது காரில் ஒன்றாக பொலன்னறுவை வரை சென்றிருந்தார்.  பின்னர் ஜனாதிபதியின் பொலன்னறுவை இல்லத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே அவர் இவ்வாறு பாராட்டியுள்ளார். 

இதன்போது, “தான் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை சென்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலே அதிகமான மக்கள் கலந்து கொண்ட கூட்டமாக காத்தான்குடி அமைந்திருந்ததாகவும், தலவாக்கலையில் தொண்டமான் ஏற்பாடு செய்ந்திருந்த கூட்டத்துக்கா அல்லது ஹிஸ்புல்லா ஏற்;பாடு செய்த காத்தான்குடி கூட்டத்துக்கா முதலிடம் வழங்குவது என்று குழப்பத்தில் இருப்பதாகவும்” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் மேலும் தெரிவித்துள்ளார். 

இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, வடமாகாண ஆளுனர் ரெஜினல் குரே உள்ளிட்ட சிலரே கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. 

Share The News

Post A Comment: