Feb 22, 2018

கூட்டு எதிர்க்­கட்சி எச்­ச­ரிக்கை.!தேசிய அர­சாங்­கத்தின் காலக்­கெடு நிறை­வ­டைந்­துள்­ள­தனால் நாட்டில் தற்­போது சட்­ட­பூர்­வ­மற்ற அமைச்­ச­ர­வையே உள்­ளது. ஆகவே சட்­ட­பூர்­வ­மற்ற அமைச்­சர்­களின் பணிப்­பு­ரை­களை அதி­கா­ரிகள் அமுல்­ப­டுத்­து­வ­தனால் அவர்கள் எதிர்­கா­லத்தில் பாரிய  நெருக்­க­டி­களை சந்­திக்க வேண்­டி வ­ரலாம்  என கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்ஜித் சொய்ஸா தெரி­வித்தார். 
கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு ­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொரளை என்.எம். பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கை யில்,
உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடை­பெற்று 11 நாட்கள் கடந்­துள்ள நிலையில் நாட்டில் அர­சாங்கம் இல்­லாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.  எனவே நாடு தற்­போது பாரிய நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. எழுந்­துள்ள பிரச்­சி­னை­களுக்கு பொறுப்­புக்­கூ­று­வ­தற்கு எவரும் இல்லை. அர­சாங்கம் சிறந்த தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதாக குறிப்­பிட்டே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் குறித்த தேர்தல் முறையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. எனினும் அது நாட்டில் ஸ்திர மற்ற அர­சியல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 
முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­ஸவின் ஆட்­சியின் போது 1989 ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்றத்தேர்தல் முறையில் இளை­ஞர்­க­ளுக்கு 25 சத­வீத ஒதுக்கீடு வழங்­கப்­பட வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனினும் அந்த விதி­மு­றையை நல்­லாட்சி அர­சாங்கம் நீக்கி பெண் பிர­தி­நி­தித்­து­வத்தை உள்­ள­டக்­கி­யது. ஆயினும் தேர்­தலின் பின்னர் பெண் பிர­தி­நிதித்­து­வத்­திலும் திருத்தம் கொண்­டு­வ­ரு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.
மேலும் புதிய உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அமர்வை எதிர்­வரும் மார்ச் மாதம் இரு­பதாம் திகதி வரையில் காலம் தாழ்த்­து­வ­தற்கும் முயற்சி எடுக்­கப்­பட்­டுள்­ளது. தேர் தல் முடி­வ­டைந்து ஒரு மாதமும் 10 நாட்­களும் கடக்கும் வரையில் உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்­களை கூட்ட முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இலங்கை வர­லாற்றில் தேர்தல் முடிந்த பின்னர் தெரி­வா­கிய உறுப்­பி­னர்கள் சத்­தியப் பிர­மாணம் செய்­யாது நீண்ட காலம் காத்­தி­ருக்க வேண்­டிய நெருக்­க­டியும் இம்­மு­றைதான் ஏற்­பட்­டுள்­ளது. அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குத் தெரி­வாகும் உறுப்­பி­னர்கள் ஒரு வருட காலத்­திற்கு எந்­த­வொரு கொடுப்ப­னவும் பெறாது பணி­யாற்ற வேண்டும் எனவும் அர­சாங்கம் தற்­போது கேட்­டுக்­கொள்­கி­றது.
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை பிர­தா­ன­மாக கொண்ட கூட்டு எதிர்க்­கட்­சியை தோற்­க­டிப்­ப­தற்­கா­கவே அர­சாங்கம் தேர்­தலை நடத்­தாது நீண்ட காலம் இழுத்­த­டிப்புச் செய்­தது. எனினும் அர­சாங்­கமே தேர்­தலில் படு­தோல்­வி­ய­டைந்­தது. மேலும் வட­மத்­திய , சப்­ர­க­முவ மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்­தலை எதிர்­வரும் மார்ச் மாதம் 31 ஆம் திக­திக்கு முன்னர் நடத்­து­வ­தாக  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்தார்.
ஆனால் தற்­போ­தைய நிலையில் மாகாண சபைத் தேர்­த­லுக்­கான எல்லை நிர்­ண­யத்­தை ­கூட வர்த்­த­மா­னியில் வெளி­யிட முடி­யாத நிலைக்கு மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சர் தள்ளப்பட்டுள்ளனர். இவ்­வா­றான நிலையில் தொகு­தி­வா­ரி­யாக  ஐம்­பது சத­வீ­தமும், விகி­தா­சாரம் ஐம்பது சதவீதமுமாக மாகாண சபைத் தேர் தலை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளனர். அவ்வாறு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமாயின் ஒரு மாகாண சபையைகூட நிலையாக முன்னெடுக்க முடியாது போகும். ஆகவே ஐம்பதுக்கு ஐம்பது என்ற முறையில் தேர்தலை நடத்தாது எழுபதுக்கு  முப்பது என்ற அடிப் படையிலாவது தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network